Space X | 4 பேர் விண்வெளிச் சுற்றுலா - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை.
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோடீஸ்வரர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இன்ஸ்பிரேஷன் - 4 என்று விண்கலத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று (செப்.,16) வியாழக்கிழமை அதிகாலை 5.32 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2-வது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.
பூமியிலிருந்து 575 கி.மீ., உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்.
3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை அரசின் மூலம் பயிற்சிபெற்று அதிகாரபூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். முதல் முறையாக, இந்த 4 பேரும் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை பெறுவார்கள்.
இந்த விண்வெளிச் சுற்றுலாவில் ஷிப்ட்4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன், செயின்ட் ஜூட் மருத்துமனையின் 29 வயதான மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ். எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு இடது செயற்கைக்கால் ஆர்சனாக்ஸுக்கு பொருத்தப்பட்டுள்ளது. செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணும் ஆர்சனாக்ஸ்தான்.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑🤔 நாம் பிறந்ததில் இருந்து நம் உடலில் வளராத உறுப்பு எது?
🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment