N.P. RAMESH, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy. Cell: 9489666102
Sunday, October 3, 2021
20.70 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் ஏன்?| WhatsApp.
20.70 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் ஏன்? | WhatsApp.
பிரபல செய்தி பகிர்வு தளமாக இருந்து வரும் வாட்ஸ்அப், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆனது வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 420 புகார் அறிக்கைகளை பெற்றுள்ளதாகவும் இந்தியாவின் கணக்கு விவரங்கள் குறியீட்டு எண் +91 மூலம் அடையாளம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கு நீக்கத்தில் வெளிநாடுகளில் இந்திய எண் பயன்படுத்தும் நபர்களும் அடக்கம்.
புகார் பக்கத்தின் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெசேஜ்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளை மேற்கொண்ட 20,70,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 420 பயனர் அறிக்கைகளும் 41 கணக்குகளுக்கு நிவாரண நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் தனது ஆதரவு பக்கத்தில் இந்த தகவல் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. புகார்கள் பெறும் தளத்தில் பயனர்களிடம் புகார்கள் பெறப்பட்டு தளத்தில் தவறான நடத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில், வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்களையும் அதற்கேற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் விவரிக்கப்பட்டு வருகிறது. அதிக தீங்கிழைக்கும் கணக்குகள், தேவையற்ற செய்திகளை அனுப்புவதைத் தடுக்கவும் வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேபோல் வழக்கத்திற்கு மாறான செய்திகளை அனுப்பும் கணக்குகளை அடையாளம் காண வாட்ஸ்அப் அதன் தளத்தில் மேம்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் கடந்த 46 நாட்களில் மட்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்ததாக வாட்ஸ்அப் தெளிப்படுத்தியுள்ளது. புகார் பக்கத்தின் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தீங்கிழைக்கும் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்ற துஷ்பிரயோக செயல்களை தடுக்க இந்தியா உட்பட உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. ஜூலை மாதத்தில் உலகளவில் தடைசெய்யப்பட்ட அனைத்து கணக்குகளிலும் 25 சதவீத கணக்குகள் இந்தியாவில் இருப்பதாக வாட்ஸ் தெரிவித்துள்ளது. உலகளாவிய சராசரி தடை குறித்து பார்க்கையில், உலகளவில் சுமார் 8 மில்லியன் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதித்தது. இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற அறிக்கையும் சமூகவலைதளங்கள் அளிக்க வேண்டும். புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment