Friday, October 15, 2021

அப்துல் கலாம் பிறந்த தினம்-இளைஞர் எழுச்சிநாள்-மாணவர்கள் (கவிதை, பேச்சு, ஓவியம், கட்டுரை) படைப்பு.

அப்துல் கலாம் பிறந்த தினம்-இளைஞர் எழுச்சிநாள்-மாணவர்கள் (கவிதை, பேச்சு, ஓவியம், கட்டுரை) படைப்பு.  


ஏவுகணை நாயகனே!

ஏவுகணை நாயகனே! காலமும் சலாம் போடும் கலாம் ஐயா!

வீசும் காற்றும் உன் புகழை பேசும்! பெருமை கொள்கிறது நம்முடைய தேசம்

ஒளியாக உமது பொன்மொழிகள் உளியாக உள்ளத்தைச் செதுக்கும்.

ராமேஸ்வரத்தின் முத்தே! தேச மக்களின் சொத்து!

இளைஞர்களின் எழுச்சியே! உள்ளம் ஒன்று இருக்கிறது அதில் உந்தன் பேரை ஒலிக்கிறது கலாம்!!கலாம்!!! 

விஞ்ஞான புறா அக்னி சிறகோடு பறக்கிறதே! உந்தன் மனிதநேயம் கண்டு மேகமும் மெய் சிலிர்க்கிறதே! 

உயரம் தொட்டும் உலகும் சுற்றியும் எளிமை மாறவில்லை! உங்களை போல இம் உலகில் யாருமில்லை. 

கனவு காண சொன்ன இளைஞர் நாயகனே!  அக்னி சிறகு தந்து ஆயத்துரங்க சென்றாயோ! 

சூரியனுக்கு தெரியாது சூரியன் உன் நகல் என்று

சோதனை உன்னை சோதித்து நின்றதும்! உந்தன் அறிவால் சாதித்து வென்றதும்! சரித்திரம் சொல்கிறது கலாம் ஐயா! சரித்திரம் சொல்கிறது! 

விண்ணை அளக்கலாம், மண்ணை நேசிக்கலாம், அறிவியலை கைக்குள் அடக்கலாம், அன்பால் அனைவரையும் ஈர்க்கலாம், அது தான் அப்துல் கலாம். 

குழந்தைபோல் சிரித்திடுவாய்! மனதில் உள்ளதை பேசிடுவாய்! 

கனவு காணுங்கள் என்று கூறிய கதாநாயகனே என்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் பெரிய இடம் உண்டு.

கவிதை: C. Nandhini- II B.Com, NMC

விண்வெளி நாயகன்-அப்துல் கலாம் 
பிறந்த தினம்- M.தனலட்சுமி, III B.Sc Physics, NMC.

Voice : M. DHANALAKSHMI, III B.Sc Physics, NMC.
Video Edit: R. Karthika, III B.Sc Physics, NMC.

அப்துல் கலாம் ஓவியம்

ஓவியம்: M. Ramalakshmi, III B.Sc Physics, NMC 

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்து


Video : E. KIRUBAGANESH, II B.A Tamil, NMC






இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...