Saturday, October 2, 2021

✍🏻🌶️🌶️இயற்கை வாழ்வியல் முறை🌶️🌶️மிளகாயின் நன்மைகள்.

✍🏻🌶️🌶️இயற்கை வாழ்வியல் முறை🌶️🌶️மிளகாயின் நன்மைகள்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாய் சமையலறையில் அளவாக பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகும்.

மிளகாய் என்றவுடன் அதன் காரமும், வெப்பமும்தான் நினைவிற்கு வரும்.

இந்த காரமான மிளகாயானது நிறைய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

மிளகாயின் காரமே சிறந்த வலிநிவாரணியாக செயல்படுகிறது. தனியாக மிளகாயினைச் சாப்பிட்டால் கண்ணில் நீரினையும், நாவில் வெப்பத்துடன் கூடிய காரத்தையும் வரவழைக்கும்.

காய்ந்த மிளகாயானது மசாலா ராணி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயில் கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம்.

🌶️🌶️🌶️🌶️🌶️

நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம்.

🌶️🌶️🌶️🌶️🌶️

அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.

🌶️🌶️🌶️🌶️🌶️

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயில் உள்ள Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது.

🌶️🌶️🌶️🌶️🌶️

அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.

🌶️🌶️🌶️🌶️🌶️

உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம், ஊறுகாய் போன்றவற்றை நம் முன்னோர் சேர்த்துப் பாவித்தார்கள்

🌶️🌶️🌶️🌶️🌶️

வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்சனை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம். வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்சனை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.

🌶️🌶️🌶️🌶️🌶️

ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் பச்சை மிளகாயை உண்ண வேண்டும். பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது. மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி மில்லியளவு குடித்துவரவாந்தி- பேதி நிற்கும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி வேளை குடிக்க மார்பு நோய் வயிற்று நோய் செரியாமை கழிச்சல் காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும். மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி வீக்கங்களுக்குப் பூச குணமாகும். மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட தொண்டைக் கம்மல் குணமாகும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும். மிளகாய் பெருங்காயம் கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாய் செடி சமூலத்தை கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும் சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயினை தேர்வு செய்யும் முறை

மிளகாயானது தெளிவான, உறுதியான பளபளப்பான ஒரே சீரான நிறத்துடன் இருக்க வேண்டும்

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயின் காம்பானது கடினமானதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயுடன் கூடிய காம்புப் பகுதியில் வெடிப்புகள் இருக்கக் கூடாது.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாய் வற்றலை வாங்கும்போது அவை ஒரே சீரான நிறத்துடன் இருக்க வேண்டும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயினை குளிர்பதனப் பெட்டியில் காம்பினை நீக்கிவிட்டு பையில் போட்டு வைக்கலாம்.

🌶️🌶️🌶️🌶️🌶️

பிளாஸ்டிக் பையில் மிளகாயினை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

பயன்படுத்தும்போது மட்டும் மிளகாயினை குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்து அலசி உபயோகிக்கவும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாய் வற்றலையும், மிளகாய்ப் பொடியையும் காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து சூரிய ஒளியில் படாதவாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

🌶️🌶️🌶️🌶️🌶️

மிளகாயானது சாஸ்கள், ஊறுகாய்கள், சூப்புகள், சாலட்டுகள், வற்றல்கள் தயாரிக்க பயன்படுகிறது

🌶️🌶️🌶️🌶️🌶️

 உணவுப் பொருட்களில் காரம், மணம் மற்றும் மசாலா பண்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

🌶️🌶️🌶️🌶️🌶️

இயற்கையின் அற்புதமான மிளகாயினை அள‌வோடு உணவில் பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.

🌶️🌶️🌶️🌶️🌶️

🌷🌷🌷🌷🌷

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...