Sunday, October 24, 2021

விண்வெளிக் குப்பைகளை அகற்ற திட்டம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சீன செயற்கைக்கோள்.

விண்வெளிக் குப்பைகளை அகற்ற திட்டம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சீன செயற்கைக்கோள்.


விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காகவும் சீர் செய்வதற்காகவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ள சீனா அதை சோதிப்பதற்காக செயற்கைக் கோள் ஒன்றை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
 
தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங்கிலிருந்து ஷிஜியான் - 21 என்ற செயற்கைக் கோள் லாங் மார்ச் - 3 B என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சீன விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. விண்வெளிக் குப்பைகளை அகற்றவும் அவற்றின் பாதையை சீர்செய்யவும் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை இந்த செயற்கைக் கோள் மூலம் சீனா சோதித்து பார்க்க உள்ளது.


பல்வேறு உலக நாடுகள் ஏவிய செயற்கைக் கோள்கள் காலாவதியான பின் விண்வெளிக் குப்பையாக சுற்றி வருகின்றன. இவற்றால் வருங்காலங்களில் விண்வெளி செயல்பாடுகள் பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில் அதை சரி செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...