Saturday, October 16, 2021

✍🏻🪜🪜இயற்கை வாழ்வியல் முறை🪜🪜உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

✍🏻🪜🪜இயற்கை வாழ்வியல் முறை🪜🪜உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

🪜🪜🪜🪜🪜    

உணவே மருந்தே! மருந்தே உணவு

இது சித்தர்களின் வேதவாக்கு. அதாவது, நாம் உண்ணும் உணவே கூட மருந்தாகும் என்பது தான்! அதனால்தான் உணவு செய்முறையில், எல்லாச் சுவைகளும் சமமாய்க் கல்நது உடலைப் பாதிக்காத வகையில் சமையற்கலை இருக்க வேண்டும் என்று வழகாட்டினர் முன்னோர்.

பதினெண் சித்தர்களில் திருமூலர் தனித்துத் தெரிகிறார். அவர் 63 நாயன்மார்களிலும் ஒருவராக, திருமூல நாயனாராகப் போற்றப்படுபவர், 5ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் திருமூலரின் திருமந்திரம், சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது. இவரது பெயரில் உள்ள மருத்துவம் தொடர்பான பாடல்கள் பல, பிற்காலத்தில் வேறு ஒருவரால் சேர்க்கப்பட்டவை என்பர். அவற்றின் மொழி நடை அவ்வாறு இருப்பதை நாம் உணரலாம்.

யோகியாய் இமயத்தில் இருந்து பொதிகை நோக்கி அகத்தியரைக் காண வந்தவர் அந்த சிவ சாது. அவர், ஓரிடத்தில் பசுக்கள் கூட்டமாக, மேய்ப்பவனைச் சுற்றி நின்று அழுதது கண்டு வருத்தமுற்றார். அவற்றின் வருத்தம் போக்க, கூடு விட்டுக் கூடு பாயும் சித்து வித்தையால், தன்னுடல் மறைத்து மூலன் என்று பெயர் கொண்டிருந்த அந்த மாடு மேய்ப்பவன் உடலில் புகுந்து கொண்டார். பசுக்களுக்கு மீண்டும் உணர்வும் தெம்பும் மகிழ்வும் ஊட்டினார். அவை வீடு திரும்பிய பின்னர், இவர் மீண்டும் மேய்ச்லச நிலம் திரும்பி தான் மறைத்து வைத்த தன்னுடலை தேட, அது காணாமையாலே, மூலன் உடலில் இருந்து கொண்டே திருமூலர் எனும் பெயர் பெற்று, தியானத்தில் இருந்து வருடம் ஒன்றாய் மூவாயிரம் பாடல்கள் எழுதினார் என்பர்.

🪜🪜🪜🪜🪜

உடல் நிலையாமை

அனுபவத்தால் முகிழ்ந்த திருமூலம் அருளிய திருமந்திரத்தின் முதல் தந்திரம் (பாடல்110) உடல் நிலையாமை எனும் உயர்ந்த ஆன்ம தத்துவத்தைப் பேசுகிறது. அதில்,

காலும் இரண்டு   முகட்டலக் கொன்றுள

பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள

மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்

போலுயிர் மீளப் புகஅறி யாதே.

உடம்பாகிய வீட்டைத் தாங்கும் தூண்களாய் இரண்டு கால்கள் உள்ளன. மேட்டு உத்தரமாய் முதுகெலும்பு ஒன்று. அதன் இருபக்கங்களிலும் கூட்டைப் போல் பெரிய விலா எலும்புகளும், பக்கத்திற்குப் பதினாறாக முப்பத்திரண்டு எலும்புகளும் உள்ளன. மேலே சொன்ன கூரையை மூடிவைக்க பலவகையான தோல்கள் உள்ளன. இத்தனை இருந்தும் உயிரானது இந்த வீட்டை விட்டுப் பிரிந்து போய்விடும். அப்படிப் பிரிந்து போய் விட்டால் மீண்டும் வந்து முன்போல இந்த உடலினுள் புக முடியாது.

🪜🪜🪜🪜🪜

உடலும் உயிரும்

உடலும் உயிருமாய் என்று சொல்லக் கேட்டிருப்போம். உயிர் இந்த உடலில் தங்கியிருக்க வேண்டுமானால், உடலைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் கெட்டு விட்டால் உயிரும் கெட்டுப் போகும்! பலரும் ஆன்மிக நெறியில் இருப்பதாய்க் கருதி, அகாலத்தில் உண்பது அல்லது முழுதுமாய் பட்டினி கிடப்பது, அல்லது ஒரே மாதிரியான உணவை எடுத்துக் கொள்வது என்று இறங்கிவிடுவார்கள். ஆனால், நம் உடல், என்பது, இறவைனை நாம் எவ்வாறு பயபக்தியுடனும் மரியாதையுடனும் போற்றி வணங்குகிறோமோ அவ்வாறே கருதத் தக்கது என்பதை சித்தர் திருமூலர் பளிச்சென்று காட்டுகிறார். இதுவும் ஆன்ம நெறி தொடர்புடையதுதான்!

ஆன்மாவைப் பேணுவதற்கு இறை சிந்தையைக் கைகொண்டோர். ஆன்மா தங்கியிருப்பதான உடலை ஒரு பொருட்டாகக் கருதாத நிலையைம் உள்ளுறையாகச் சாடுவார் திருமூலர். அவரது ஒரு பாடலில்,

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே...

என்று தமது திருமந்திரத்தில் (725) தெளிவாக்குகிறார்.

ஏன் உடலை நாம் பேணிக்காக்க வேண்டும்? பரம்பொருளாகிய அந்த உத்தமன் உறைவது இந்த உடலுக்குள்ளேதான் என்பதை நாம் உணர்ந்து கொண்டால், இறைவன் உறையும் ஆலயத்தை நாம் எப்படிக் காக்க வேண்டும் என்று நினைப்போமோ அவ்வாறு இந்த உடலையும் பேண வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்!


இந்த உடலை நாம் அழித்துக் கொண்டால், நம் உயிரை அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்! அதுமட்டுமல்ல, இறைவனின் ஆன்ம சம்பந்தத்தை அறுத்தவர் போலாவோம்!  ஆகவேதான்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே..

என்று தெளிவான திருமந்திரத்தை நமக்கு அளித்தார்.

உள்ளமே பெருங் கோவில், ஊனாகிய உடம்பு ஆலயம், ஜீவனே சிவன், கள்ளங்கபடற்ற புலன் ஐந்தும் சுடர் மணி விளக்குகள் என்றார். உடலைப் பேண வேண்டும், சரி.. அந்த உடலின் ஆக்கமும், அதனைப் பாதுகாக்கும் முறைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனை திருமூலரே சில பாடல்களில் நமக்கு அளித்துள்ளார்.

🪜🪜🪜🪜🪜

சித்தர் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

உடல் பஞ்ச பூதங்களால் ஆனது நிலம், நீர், காற்று, நெறுப்பு, ஆகாயம் என்ற ஐந்து தன்மைகளும் கலந்தது. இவற்றில் நீர், வாயு, அக்னி இவை சரியான நிலையில் உடலில் இருந்தால், நம் உடல் சரியான இயக்கத்தில் இருக்கும்; வெகு நாட்கள் நலமாக வாழலாம் என்பது சித்தர் சொல்லும் வாழ்க்கை ரகசியம். அதன் அடிப்படையில்தான், நம் உடலில் ஓடும் இந்த மூன்று நாடிகளை பிரதானமாகக் கொண்டு, நோய் கறித்து அறிந்தனர் சித்தர்கள்.

வாதம், பித்தம், கபம் இம்மூன்றின் அடிப்படையில்தான் உடலின் நோய்த் தன்மை கணிக்கப்படுகிறது. இம்மூன்றின் சமநிலை தவறிக் கெட்டால், உடலுக்கு நோய்கள் வந்துவிடுகின்றன. நம் உடலில் இயல்பாக இருக்க வேண்டிய உஷ்ணம், வாயு, நீர் ஆகியவை தம் அளவில் இல்லாமல், மிகுந்தோ குறைந்தோ போனால், நோய் நம்மைப் பீடிக்கிறது. நெருப்பாகிய உஷ்ணத்தால் பித்த நோயும், வாயுவினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் தோன்றுகின்றன. சித்த மருத்துவத்தில் நாடியைப் பிடித்துப் பார்த்தல் என்பது நோய் அறிதலின் முதல் படி. அதில் வாதம், பித்தம், சிலேட்டுமம் எனும் சிலேஷ்மமாகிய கபம் ஆகியவற்றின் நாடி துடிக்கும் நடையைக் கொண்டு, எது மிகுந்திருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்பதைக் கணித்து நோயை அறிந்து விடுவர்

🪜🪜🪜🪜🪜

சீராக்கும் மருந்துகள்

நாடியை அறிந்து, அதனைச் சீராக்கும் மருந்துகளை நமக்கு அளித்தனர். அவை, நாம் இயல்பாக உண்ணும் சுக்கு, இஞ்சி இவற்றிலிருந்து தொடங்குகிறது. சித்த மருத்துவத்தில், திரிபலா, திரிகடுகம் இவ்விரண்டும் மிகப் பிரபலம். சீரான உடல் நலத்துடன் இருக்க இவ்விரண்டின் சூரணம், அல்லது இவற்றை தனியாக சமையலில் சேர்த்து உண்ணுதல் சிறப்பானது.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்தது திரிபலா சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்தது திரிகடுகம். காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை சகடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே' என்பது பிரபலமான பாடல். காலை வெறும் வயிற்றில் இஞ்சியும், நன்பகலில் சுக்கும், இரவில் கடுக்காயும் தொடர்ந்து 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தால், கிழவனும் குமரன் ஆகலாம்; அதாவது இளமைப் பொலிவுடன் திகழலாம் என்கிறது அந்தப் பாடல்.

ஒருவனின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்பர் தாய் தன் பிள்ளை மீதுள்ள பாசத்தால் கண்ட ணவுகளையும் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்து விடுவாள் ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் அகற்றி, அவன் ஆயுளை நீட்டித்து விடும் என்பர்.

🪜🪜🪜🪜🪜

அறுசுவை உணவு

நாம் உண்ணும் உணவில், அறுசுவைகளும் சரிவர இருக்க வேண்டும். எந்தச் சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நாம் தினமும் உண்ணும் உணவில் துவர்ப்புச் சுவையின் ஆதிக்கம் மிகக் குறைவு. துவர்ப்புச் சுவையே ரத்தத்தை விருத்தி செய்யும், வாழைப்பூ சரியான துவர்ப்புச் சுவை உடையது. ஆனால், துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது, ஆகவே வாழைப்பூவை, வாயு பதார்த்தமான பருப்பு வகையுடன் சேர்த்தே பொரியலாக்கி உண்கிறோம். அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், இந்தக் குறை சரியாகும்.

திரிபலாவை, எவரும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக அலோபதி மாத்திரைகள் நிறைய எடுத்துக் கொள்பவர்கள், இதை காலை, இரவு உணவுக்குப் பின் உண்டால் அந்த மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகளைக் குறைக்கும் என்பர்.

🪜🪜🪜🪜🪜

அமிர்தமும் நஞ்சும்

ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும், நஞ்சும் சேர்த்தே உள்ளது என்கிறது சித்த மருத்துவம். எனவே சித்தர்கள் இவற்றில் உள்ள நஞ்சினை நீக்கி மருந்து தயாரிக்க அறிவுறுத்தினர்.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு; அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு, கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு!

சுக்கின் மேல்புறம் சுண்ணாம்பு பூசி காயவிட்டு, மிதமான நெருப்பில் வாட்ட வேண்டும். சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும். நேரம் எடுத்து, நன்கு அறியபின் ஒரு கத்தியால் சுண்ணாம்பைச் சுரண்டினால், சுக்கின் மேல் தோலுடன் அது வந்து விடும். பிறகு இதனை இடித்து சலித்து வைக்க வேண்டும்.

அதுபோல், கடுக்காயை உடைத்து மேலுள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு நஞ்சாகிற கொட்டையை நீக்கிவிட வேண்டும். சதைப் பகுதியை இடித்துத் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சியை நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைத்து, பத்து நிமிடம் கழித்துப் பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் தெளிவாக இருக்கும் மேல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டால் சுத்தம் செய்யப்பட்ட மருத்துவப் பொருள்கள் தயாராகிவிடும். இதுவே அமுதம்!

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை! சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவள் இல்லை' என்பதெல்லாம் இந்தக் கைகண்ட வீட்டு மருந்தின் பெருமையை நமக்குச் சொல்லும்.

🪜🪜🪜🪜🪜

கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

🪜🪜🪜🪜🪜

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🍩🍩🍩🍩🍩

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚 

 உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த   ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🍩🍩🍩🍩🍩

(( செல் நம்பர்)) ((7598258480)) ((6383487768))

🍩🍩🍩🍩🍩

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...