வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயல்பட தொடங்கியது.
சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கிய நிலையில், சுமார் 7 மணி நேரத்துக்கு பின் அவை மீண்டும் செயல்பட தொடங்கின. இரவு முதல் அதிகாலை வரை வாட்ஸ் அப், பேஸ்புக் இல்லாமல் பயனாளர்கள் பலரும் தவித்துப் போய் விட்டனர்.
வாட்ஸ் அப் இல்லாமல் பலருக்கு வாழ்க்கையே இல்லையே என்றாகி விட்டது. இன்ஸ்டாகிராம் தான் பலரது வசிப்பிடமாகிவிட்டது. முகநூலில் காலை வணக்கம் கூறாமல் பலருக்கு காபி, டீ கூட இறங்காது அந்த அளவிற்கு பலரும் சமூக வலைத்தள அடிமையாகி விட்டனர்.
இந்த சமூக வலைத்தள பக்கங்கள் நேற்றிரவு முதல் திடீரென முடங்கின. என்னவாயிற்று என்று பலரும் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தனர். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சேவை முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவைகள் முடங்கின. ஐ.பி.எல் தொடர்பான தகவல்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு தரப்பும், நண்பர்கள், நண்பிகளிடம் சாட் செய்ய முடியவில்லை என்று ஒரு தரப்பும் டுவிட்டரில் ஆதங்கத்தை கொட்டினர்.
No comments:
Post a Comment