✍🏻🧩🧩இயற்கை வாழ்வியல் முறை🧩🧩அருகம்புல்லின் நன்மைகள்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும்.
முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும்பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
உடல் வெப்பத்தை அகற்றும் சிறுநீர் பெருக்கும் உடலைப் பலப்படுத்தும் குடல் புண்களை ஆற்றும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.
🧩🧩🧩🧩🧩🧩
ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
🧩🧩🧩🧩🧩🧩
நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று என அனைத்தும் இக்காலத்தில் நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. அருகம்புல் ஜூஸ் தினந்தோறும் காலை அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் அதனை நச்சுக்களும் வியர்வை, சிறுநீர் மூலமாக வெளியேறும்.
🧩🧩🧩🧩🧩🧩
உடலில் இன்சுலின் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
🧩🧩🧩🧩🧩🧩
குறைவான நீரை அருந்துபவர்களுக்கும், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றியிருப்பவர்களுக்கும் சிறுநீர் பிரிவதில் பிரச்சனை இருக்கும். அருகம்புல் ஜூஸ் அருந்த சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை தடுத்து சிறுநீரை பெருக்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
சிலருக்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சமச்சீரற்ற தன்மையால் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் அஜீரணம், வாயுத்தொந்தரவுகள் ஏற்படும். இக்குறைபாட்டை போக்க ஒரு நாளைக்கு ஒருமுறை அருகம்புல் ஜூஸ் அருந்த வேண்டும்.
🧩🧩🧩🧩🧩🧩 பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகம் ரத்தபோக்கு ஏற்படும். அது போல சிலருக்கு என்ன காரணத்தினாலோ மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இப்படிப்பட்டவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் இக்குறைபாடுகள் நீங்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
ஒரு சிலருக்கு எவ்வளவு உணவை உண்டாலும் பசி அடங்காமல் இருக்கும். மேலும் அதிகமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால் அதீத பசியை கட்டுப்படுத்தும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்கு தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன. அருகம் புல் ஜூஸ் தினந்தோறும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்றவை நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது துன்புறுவர். இவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சிலருக்கு முகவாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அருகம்புல் ஜூஸ் அருந்தி வருபவர்களுக்கு நரம்புகள் வலுப்பெற்று எப்படிப்பட்ட வாத நோய்களும் ஏற்படாமல் காக்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
உடல் எடை இன்றிருக்கும் அவசர வாழ்க்கை முறை மற்றும் கட்டுப்பாடுகளில்லாத உணவு முறைகளால் பலருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறையும்.
உடல் பருமன் குறைவதற்கு அருகம்புல்லுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
🧩🧩🧩🧩🧩🧩
மூலம்
மலத்துவாரத்தின் தோலின் ஒரு ஓரத்தில் ஒரு புடைப்பு போல் ஏற்படுவது மூலம் எனப்படும். மூல நோய் பல வகைப்படும். எப்படிப்பட்ட மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அருகம்புல் ஜூஸ் அருந்தி வருவது சிறந்த நிவாரணம் அளிக்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல் வேரை நிழலில் காயவைத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி அந்த எண்ணையை தலையில் தேய்த்தால் தலையில் உண்டாகும் பேன், பொடுகு போன்றவை நீங்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல்லை சிறிதளவு எடுத்து அதை நீர்விட்டு காய்ச்சி அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் மற்றும் சிறுநீர்ப்பை சம்பந்தமான நோய்களும் குணமாகம்.
🧩🧩🧩🧩🧩🧩
நகச்சுற்று உள்ளவர்கள் அருகம்புல்லுடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் தடவினால் அதன் வலியும் வீக்கமும் குறையும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல்லுடன் அதே அளவு வேப்பிலையை எடுத்து நீர்விட்டு காய்ச்சி அதை வடிகட்டி சிறிதளவு குடித்தால் தீராத வயிற்று வலி குணமாகும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.
🧩🧩🧩🧩🧩🧩
அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து இதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகம். தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.
அருகம்புல்லை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
🧩🧩🧩🧩🧩
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🍩🍩🍩🍩🍩
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🦚🦚🦚🦚🦚
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
🍩🍩🍩🍩🍩
(( செல் நம்பர்)) ((7598258480)) ((6383487768))
🍩🍩🍩🍩🍩
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH : 9750895059.
No comments:
Post a Comment