Friday, October 29, 2021

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு .

 பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.


எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற உள்ளோம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். மேலும், 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும், தி.நகரில் நகைதிருட்டை தடுக்க பெண்களுக்கு ஸ்கார்ப் கொடுக்க உள்ளதாகவும், தி.நகரில் மட்டும் 800 போலீஸ் கொண்ட தனிப்படை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பேருந்துகளில் பட்டாசு கொண்டு போனால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Source By : puthiyathalaimurai.





இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க. 

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...