Thursday, October 28, 2021

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் பங்குபெறுவது எப்படி?

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் பங்குபெறுவது எப்படி?


1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில்  கற்றல் இடைவெளியினை குறைக்கும் நோக்கில் இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறையால் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

http://illamthedikalvi.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களை பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து தன்னார்வலர்களாக இணைந்துகொள்ளலாம்.

இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.


தன்னார்வலர்கள்.


வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.

கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும் 

தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)

யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்

குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்


தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவத்தை தொடங்கு / Click here to start the Volunteer Registration Form 


இல்லம் தேடிக் கல்வி : 

கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் , அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " என்கிற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது . " இல்லம் தேடிக் கல்வி " திட்டமானது , மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் , ரூ .200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்.


திட்டத்தின் தொலைநோக்கு : 


கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் , அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளைச் சரிசெய்தல்.


 திட்டக்குறிக்கோள் : 

அ . பள்ளி நேரங்களைத் தவிர , பள்ளி வளாகங்களுக்கு வெளியே , மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல். 

ஆ. மாணவர்கள் , பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை " இல்லம் தேடிக் கல்வி " திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

இ . இத்திட்டம் 6 மாதகாலத்திற்கு , தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1 % மணி நேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணி வரை ) மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கி அவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்தல்.


திட்டச் செயல்பாட்டு வழிமுறைகள் :

 தமிழகத்தில் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34,05,856 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் 8 முதல் 1 கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களிடையே கடுமையான கற்றல் இழப்பை ஏற்படுத்தியது. இந்த கிராமப்புற குடியிருப்பு அடிப்படையிலான வெளியீட்டு திட்டமானது, குழந்தைகளிடையே கற்றல் இழப்புகளை குறைக்க உதவும்.


📒கையேடு -pdf



இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...