Friday, October 29, 2021

பூமியை நோக்கி வரும் வலுவான புவி காந்த புயல்..இன்று தாக்கக் கூடும் என எச்சரிக்கை.

பூமியை நோக்கி வரும் வலுவான புவி காந்த புயல்..இன்று தாக்கக் கூடும் என எச்சரிக்கை.


இன்று (அக்டோபர் 30) பூமியை வலுவான புவி காந்த புயல் பூமியைத் தாக்கக் கூடும் என எச்சரித்துள்ளது அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration). இந்த ஜி3 (ஸ்ட்ராங்) புவி காந்த புயல் 2887 பகுதியில் ஏற்பட்டுள்ள Coronal Mass Ejection-இன் விளைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையில் இதன் தாக்கம் உணரப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், ஜெர்மனி, செக் குடியரசு, போலாந்து, உக்ரைன், ரஷ்யா, கஜகஸ்தான், மங்கோலியா, சீனா, கனடா, இங்கிலாந்து மாதிரியான நாடுகளின் பகுதிகள் இந்த 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையின் கீழ் வருகின்றன. 



இந்த புயலால் பவர் சிஸ்டத்தில் சில பாதிப்புகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையற்ற வோல்டேஜ் சிக்கல், பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்புயல் உள்ளதாம். விண்கலத்திலும் இந்த புவி காந்த புயல் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

31-ஆம் தேதியன்று மிதமான ஜி2 புவி காந்த புயல் தாக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source By : puthiyathalaimurai.


இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...