செந்தமிழ் செவ்வாய் பயணம்-பத்மஸ்ரீ Dr. மயில்சாமி அண்ணாதுரை ஐயா உரை.
நிலாவை குறித்த ஆராய்ச்சி பற்றியும் அந்த நிலாவை பற்றி ஆராய்ச்சி செய்ய இருந்த விண்கலத்தை மாற்றி செவ்வாய்க்கு எவ்வாறு அனுப்பி மங்கள்யான் என்ற சரித்திர சாதனை ஏற்படுத்தும் என்பதை மிகவும் விளக்கமாகக் கூறினீர்கள் ஐயா. உலக நாடுகள் அனைத்தும் பல தோல்விக்கு பிறகு செவ்வாயை சென்றடைந்தன. ஆனால் நம் இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள் முதல் முயற்சியிலேயே செவ்வாய் அடைந்து 7 வருடங்களுக்கு மேலாக இன்னும் செவ்வாயை ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த வகுப்பு வழியாக தெரிந்து கொண்டோம்.
கையருகே நிலா போன்ற அரிய படைப்புகள் மூலம் தாங்கள் இந்த தமிழ் உலகிற்கு பல அறிவியல் கருத்துக்களை தந்துள்ளீர்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் மிகவும் எளிமையாக படித்து உலகம் போற்றும் மகனாக அறிவியல் சரித்திரம் படைத்த தங்கள் வாழ்க்கை வரலாறு கேட்கும் போது எனக்கும் எமது கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் ஒரு உந்து சக்தியாக உள்ளது. தமிழ் வழியில், சாதாரண ஆரம்ப அரசு பள்ளியில் படித்து உயர்ந்த நிலையை அடைந்த உங்களுடைய வாழ்க்கை வரலாறு கேட்கும் அனைவரும் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.
இளைஞர்கள் முன்னேற தொடர்ந்து முயற்சி கொண்டே இருக்க வேண்டும். தங்களை கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் பல சரித்திர சாதனைகளை படைக்க முடியும் என்று நாங்கள் வரலாற்றையே உதாரணமாக கூறிய உங்களுக்கு எங்கள் கல்லூரி மாணவர்களும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இவ்வளவு சிறப்பான உரை நிகழ்த்திய தங்களுக்கு பல கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா.🙏🙏🙏🙏🙏
Thanks: Mind Your Mind with Stephenraj 🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment