Tuesday, October 19, 2021

Oppo, Vivo, OnePlus சீன போன்களுக்கு வருகிறதா தடை?

Oppo, Vivo, OnePlus சீன போன்களுக்கு வருகிறதா தடை?

சீன மொபைல் போன்களுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்படுமா என்ற அச்சம் பயனாளர்களிடையே நிலவுகிறது.

சீனாவைச் சேர்ந்த டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 200 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சீன செயலிகளைப் போலவே சீன மொபைல் போன்களுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சீன ஸ்மார்ட்போன்களுக்கான தேவை இந்தியாவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சீன ஸ்மார்ட்போன்களுக்கான மவுசு இந்தியாவில் குறையவே இல்லை. ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 63.01 லட்சம் சீன ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2019ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 46.07 லட்சம் சீன ஸ்மார்ட்போன்களை மட்டுமே இந்தியர்கள் வாங்கியிருந்தனர். இந்த ஆண்டின் அக்டோபரில் மட்டும் 17 லட்சம் ஸ்மார்ட்போன்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

க்ஷியோமி, விவோ, ரியல்மீ, ஒப்போ ஆகிய நான்கு பிராண்டுகள்தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த ஐந்து நிறுவனங்களும் இணைந்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 88 முதல் 94 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளன. கனலைஸ் நிறுவனத்தின் ஆய்வுப்படி, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 26.1 சதவீதப் பங்குகளுடன் க்ஷியோமி பிராண்டு முன்னிலை வகிக்கிறது.


இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...