Wednesday, November 3, 2021

டிச.8ல் TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!

டிச.8ல் TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2017 ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் மறுதேர்வானது வரும் அக். 28-ஆம் தேதி முதல் அக். 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வு மையங்கள் வெகு தொலைவில் இருப்பதாக பலர் புகாரளித்து வந்த நிலையில் தேர்வானது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, ‘டிச.8ம் தேதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு நடைபெறும். மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படும். டிசம்பர் 8ல் இருந்து 12ம் தேதி வரை தொகுதியாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெறும். டிசம்பர் 8ல் 23,684 பேரும் 9ம் தேதி 21,299 பேரும், 10ம் தேதி 24,710 பேரும், 11ம் தேதி 32,190 பேரும், 12ம் தேதி 36,248 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

தொழில்நுட்ப கல்விக்கான விரிவுரையாளர் தேர்வு 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்படும். 1060 விரிவுரையாளர் பணிக்கு 1,38, 140 பேர் விண்ணப்பித்துள்ளனர். வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்கான நிலை தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.




இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...