Saturday, November 27, 2021

✍🏻☮️☮️இயற்கை வாழ்வியல் முறை☮️☮️யானை நெருஞ்சில் நன்மைகள்.

✍🏻☮️☮️இயற்கை வாழ்வியல் முறை☮️☮️யானை நெருஞ்சில் நன்மைகள்.

☮️☮️☮️☮️☮️

யானை நெருஞ்சில் என்ற மூலிகை தெற்காசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையாகும். இது சிறுநீரம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது.

☮️☮️☮️☮️☮️

இதில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது,  சிறுநீரக் கல் (Anti-nephrolithiatic) இருக்கும் பட்சத்தில் எதை வெ ளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல் ,அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.0

☮️☮️☮️☮️☮️

இதன் சாறு சிறுநீரகத்தில் உருவாகும்  Streptococcus progeny, Enterococcus faccalis, gram negative ஆகிய பாக்டீரியாக்களை (Antibacterial) அழிக்கிறது. சிறுநீரகத்தை (Nephroprotective activity) பாதுகாக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் துவாரம், ஆண்குறி புண்,  ஆண் மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு இவைகள் நீங்கும்.

பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய்க்கான  gonorrhoea  போன்ற நோய்களை குணப்படுத்தும்.

☮️☮️☮️☮️☮️

உடலில் உள்ள அதிக்கொழுப்புகளை குறைத்து இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை (Anti-hyperlipidemic activity)  தடுக்கிறது.

☮️☮️☮️☮️☮️

வயிற்றில் ஏற்படக்கூடிய புண்ணை  (Anti ulcer )குணப்படுத்துகிறது. மேலும்  உடலில் வலி வீக்கம்(Anti-inflammatory) ஆகியவற்றை சரி செய்கிறது.

இது நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கி செல்லின் வளர்சிதை மாற்றத்தினை சீர்படுத்தி  Antioxidant ஆக செயல்படுகிறது

கல்லீரலை (Hepato protective) பலப்படுத்தி சீராக வைக்கிறது


பிராஸ்டேட் வீக்கம்

ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து பிராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது

பாலுணர்வு குறைபாடை (Aphrodisiac) சீர் செய்கிறது

☮️☮️☮️☮️☮️

யானை நெருஞ்சில், (Pedalium Murex)

மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந் தானுிக்குக்

தேகத்திற் கல்லடைப்பைத்

தீர்க்குங்காகைத்தாந்

தேனையரும் பாகைத் திருத்துங் கிளிமொழியே

யானை நெருஞ்சிலதுசித்தர் பாடல்

☮️☮️☮️☮️☮️

உடலை குளிர்ச்சிப்படுத்தும், வெள்ளைப்படுதல் , வெண் குஷ்ட ரோகம், உடல் எரிச்சல், தாகம், பித்த மயக்கம் இவைகளைப் போக்கும்.

☮️☮️☮️☮️☮️

உண்ணும் முறை

இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு , 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழப்பு போல் ஆகம். இதைக் குடித்தால் மேற்கண்ட நோய்கள் போகும் . மேலும் சொப்பனஸ்கலிதம்,  தாது உடைதல், சிறுநீ்ர் எரிச்சல் நீங்கும்.

☮️☮️☮️☮️☮️

யானை நெருஞ்சில் காயை காய வைத்து உலர்த்தி  கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் நீங்கும். யானை நெருஞ்சிலின் சமூலம்(அனைத்தும்) அரைத்து நெல்லி அளவு  எருமைத்தயிரில் கலக்கி காலை ஒரு வேளை மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல் , வெள்ளைப்படுதல், தேக எரிச்சல் நீங்கும்.

☮️☮️☮️☮️☮️

இதன் இலையை இடித்து சூரணம் செய்து இரண்டு வேளைப்பாலில் போட்டு நாட்டுச் சர்க்கரை கூட்டி சாப்பிட்டு வந்தால்  வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும்

☮️☮️☮️☮️☮️

இதன் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் சிறுநீரக,  எரிச்சல்  விந்து நீர்த்துப்போதல் , சிறுநீர் போகும்போது வலி , ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும்

☮️☮️☮️☮️☮️

அதுபோல கேன்சியம் குறைபாட்டாலும் மூட்டுகளில் நீர் கோர்த்து இருக்கிறதால வரக்கூடிய மூட்டு வலி உடல் வலி இடுப்பு வலி கழுத்து வலி கை கால் வலி முதுகு வலியும் சீக்கிரத்துல நீங்கும் அடுத்து உடலில் ரத்தம் இல்லனு கவள படா இந்த பொடியை காலையிலயும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் 

☮️☮️☮️☮️☮️

அதனால் நமது உடலில் ரத்த அளவும் அதிகரிக்கும் ரத்தத்தில் கலந்திருக்கிற கிருமிகளை அழித்து ரத்தம் சுத்தம் ஆகும்  ஊற வைத்துள்ள பொடியை சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருகும்

☮️☮️☮️☮️☮️

 குழந்தை பிரசவித்த பெண்களுக்கு கூட அதிகப்படியான அழுக்குகள் கிருமிகள் சேர்ந்து இருக்கும் அதுக்கு பெருநெருஞ்சி ஓட இலையையும் காயையும் தண்ணீரில் போட்டு வேகவைத்து காபி மாதிரி குடிச்சிட்டு வந்தா தங்கியிருக்கிற புழு பூச்சிகள் எல்லாம் வெளியேறும் அதுமட்டுமில்லாமல் பிரசவத்தின் போது  பெண்களுக்கு பெருநெருஞ்சி கசாயம் கொடுக்கிற பழக்கம் வழக்கத்தில் தான் இருக்கு.

☮️☮️☮️☮️☮️

கட்டுரை மருத்துவர் பாலாஜி கனக சபை, MBBS, PhD (Yoga)

அரசு மருத்துவர்

கிருஷ்ணகிரி மாவட்டம்

☮️☮️☮️☮️☮️

ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் முக்கிய மூலிகை. நீங்கள் குறைபாடு நீங்க மருந்தாகவே இதை எடுத்துகொள்வதாக இருந்தால் மருத்துவரின் அறிவுரை அவசியம்.

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...