Friday, January 7, 2022

டிஜிட்டல் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் ஏற்கவும்: யு.ஜி.சி.

டிஜிட்டல் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் ஏற்கவும்: யு.ஜி.சி.



மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் அமைப்புகள் அவற்றை டிஜிட்டல் வடிவிலேயே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது;

மாணவர்கள் டிஜிட்டல் வடிவில் சான்றிதழ்களை சமர்ப்பித்தால் அதை அசல் சான்றிதழாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


டிஜிலாக்கர் தளத்தின் மூலம் மாணவர்கள் சமர்ப்பிக்கும் பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உட்பட அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் கல்வி நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி).

டிஜிலாக்கர் மூலம் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. அதனை பெற மாணவர்கள் டிஜிலாக்கரில் பதிவு செய்ய வேண்டி உள்ளது. கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் சேகரித்து வருகிறது நேஷனல் அகாடமிக் டெபாசிட்டரி (NAD). அதன் மூலமாகவே டிஜிலாக்கரில் சான்றிதழ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு டிஜிலாக்காரின் NAD போர்டலில் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறும் யு.ஜி.சி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Source : Puthiyathalaimurai

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...