முடிந்த அளவு பிறர்க்கு உதவி செய்யவோம்-பலமடங்கு திரும்ப வரும்.
தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம்.
நமது இயல்பே கூடி வாழும் தன்மை உடையது தான்.
பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம்.
பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம்.
பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம்.
நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும் பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளது.
சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படித் தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது.
மரம் உதவுகிறது நிழல் தந்து புல்லாங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட..
நாம் சற்று கவனித்தோமானால் எல்லாமே உதவுகின்றன என்று தோன்றும்.
ஆகவே முடிந்த அளவு கண்டிப்பாக பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.
அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்.
நீங்கள் செய்கிற உதவியைப் பெறுபவர் மனசார வாழ்த்துவது போல் அது இருக்கட்டும். உதட்டால் அல்ல.
நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பது தான் பிரபஞ்ச விதி. முடிந்த மட்டும் உதவுவோம்.
நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே கிடைக்கும். நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.
எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்.
#வாழ்த்துக்கள்.
#வாழ்க_வளமுடன்.
❤
உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment