Friday, February 4, 2022

தமிழகத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு எப்போது?

தமிழகத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு எப்போது?

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ தேர்வுகளுக்கான  தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு  பணியாளர் தேர்வாணையத்தின்  தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

 விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் கா பாலச்சந்திரன் மேலும் கூறுகையில், “   குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

அனைத்து தேர்வுகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 32 வகையான தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) திட்டமிட்டுள்ளது” என்றார். 



No comments:

Post a Comment

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி. இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன்...