புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரிக்கு ஏ+ உயர்தரச்சான்று.
திருச்சி புத்தனாம்பட்டியில் 54 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நேரு நினைவுக் கல்லூரி 12 துறைகளை கொண்டுள்ளது. இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் தேசிய தர மதிப்பீட்டில் முதல் சுற்றில் ஏ தகுதியை பெற்றிருந்தது. நாக் கமிட்டியின் இரண்டாம் சுற்று மதிப்பீடு நேரு நினைவுக் கல்லூரி புதிய மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் விண்ணப்பித்து அறிக்கையை சமர்ப்பித்தது.
புன்ஷ்லோக் அகில்யாதேவி ஹோல்கர் சோலாப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.மிருணாளினி பட்நவிஸ், கர்நாடக மாநிலம் பெலகாவி ராணி சென்னம்மா பல்கலைக்கழக கணினித் துறை பேராசிரியர் டாக்டர்.சிவானந்த கோர்னாலே, கேரளா மாநிலம் கோழிக்கோடு எஸ் ஏ எப் ஐ இன்ஸ்டிடியுட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடி முதல்வர் இ.பி இம்பிச்சி கோயா குழுவினர் கடந்த ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனர்.
அதை தொடர்ந்து நேரு நினைவு க்கல்லூரிக்கு ஏ+ ப்ளஸ் தகுதியை நாக் கமிட்டி வழங்கியுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் பொன்பெரியசாமி கூறுகையில் நேரு நினைவுக் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் திறன், ஆராய்ச்சி, பெற்றோர் முன்னாள் மாணவர்கள் பின்னோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து மேற்கொண்டனர். இதில் 4 மதிப்பெண்களுக்கு 3.28 என்ற மதிப்பெண் பெற்று நேரு நினைவுக் கல்லூரி ஏ+ தகுதி பெற்று இந்தியாவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த தரத்தின் (A+) மூலமாக, கல்விப்பணி மற்றும் மாணவர்களுக்கு உயர்ந்த அங்கீகாரம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை மேலும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவிகளும் அதிகரிக்கும்.
இத்தகைய உயர்மிகு அங்கீகாரம் பெற்றமைக்காக கல்லூரி தலைவர் Er. பொன். பாலசுப்ரமணியன் மற்றும் செயலர் திரு. பொன். இரவிச்சந்திரன் ஆகியோர் கல்லூரி முதல்வர், பொன்பெரியசாமி, அ. வெங்கடேசன் IQAC ஒருங்கினைப்பாளர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பனியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment