Tuesday, March 1, 2022

தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?


தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சரிஆகி வருவதால் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 1,12,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 2012 ல் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக 84 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் பல்வேறு வகைகளில் உள்ளன. இதன் அடிப்படையில் Pharmacist(Siddha) பணியில் 73 காலியிடங்கள், Pharmacist (Ayuveda) பணியில் 6 காலியிடங்கள், Pharmacist (Unani) பணியில் 2 காலியிடங்கள்,Pharmacist (Homoeopathy) பணியில் 03 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவருக்கு மாத சம்பளம் ரூ.35,400 – 1,12,400 வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பித்தார்கள்,பணி சம்பந்தப்பட்ட துறையில் படித்தவராக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணியிடங்களை விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்,பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்  முறை: http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 17, 2022 ஆகும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய mrb.tn.gov.in அல்லது http://www.mrb.tn.gov.in/notifications.html என்றஇணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Source: tamil.examsdaily.in

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...