Tuesday, March 1, 2022

✍🏻🌞🌞இயற்கை வாழ்வியல் முறை🌞🌞கோடை வெயிலை சமாளிக்க

✍🏻🌞🌞இயற்கை வாழ்வியல் முறை🌞🌞கோடை  வெயிலை  சமாளிக்க 

🌞🌞🌞🌞🌞🌞

அடிக்கிற வெயில் நம்மை பயமுறுத்தவே செய்கிறது ..

நீர் கடுப்பு

கல் அடைப்பு

மூல கடுப்பு

உடல் அரிப்பு

வேர்க்குரு முதல் பெரிய தோல் நோய்கள்

வைரஸால் வரக்கூடிய அம்மை நோய்கள்

உடல் எரிச்சல்

திடீர் மயக்கம்

உடல் சோர்வு

தூக்கமின்மை

நரம்பு தளர்ச்சி

வயிற்று புண்

மெட்ராஸ் ஐ போன்ற கண் நோய்கள்..

🌞🌞🌞🌞🌞🌞

இந்த வெயிலுக்கு காரணம் என்ன ?

மரம் நட மனதில்லாமல், செயற்கை குளிரூட்டிகள் பல வைத்து ஏசி ரூம் இரவு தூங்கி, ஐஸ் வாட்டர் பருகி.. காசுக்கு தக்கவாறு –கோடை வெயிலின் திடீர் கடைகளின் எசன்ஸ் சர்பத்துகளை அருந்தும், விவசாயத்தை அசிங்கம் என்று நினைக்கும் சாராசரி மனிதன் தான் காரணம்.

இயற்கையை நாம் அழிக்க அழிக்க தாக்கத்தை நமக்கு திருப்பி அடிக்க காத்து கொண்டே இருந்து பழி வாங்கி கொண்டிருக்கிறது.

எப்படி சமாளிக்கலாம் ?

🌞🌞🌞🌞🌞🌞

கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகள்

🌞🌞🌞🌞🌞🌞

கோடை கால வெயிலுக்கு சின்னம்மை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் உருவாகும். இதில் இருந்து தப்பிக்க தினசரி, 2½ முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் குழந்தைகளுக்கு தடிமனான ஆடைகளை உடுத்தக் கூடாது.

🌞🌞🌞🌞🌞🌞

தோல் வறட்சியானால், சிறுநீர் சரியாக கழிக்க முடியாது. வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வரும். இதனால் உடலில் தடிப்பு போன்று இருக்கும். அதை தவிர்க்க, தினமும் காலை, மாலை என இரண்டு முறை குளிக்க வேண்டும்.

🌞🌞🌞🌞🌞🌞

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த உடன், குளிர்ந்த தண்ணீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.

🌞🌞🌞🌞🌞🌞

கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம் ஆகும். உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும்.

🌞🌞🌞🌞🌞🌞

இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. அதிகளவு தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை இருக்காது.

🌞🌞🌞🌞🌞🌞

வெயில் காலத்தில் இளநீர், மோர், பதநீர், நுங்கு போன்ற குளிர்ச்சியானவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் உடலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைக்கிறது.

🌞🌞🌞🌞🌞🌞

அத்துடன் தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ சாப்பிடலாம்

🌞🌞🌞🌞🌞🌞 

கண்ட கண்ட எனர்ஜி ட்ரிங்க்சை விட நமது பானாகாரம்  மிகவும் நல்லது.

ஆயுர்வேத மருத்துவத்தின் படி .

🌞🌞🌞🌞🌞🌞

பார்லி, கோதுமை, தேன், மண்பானையில் சேகரித்த நீர், மோர், இளநீர், திராட்சை, மாதுளம், பேரிச்சம்பழம், ஏலக்காய், இலவங்கப்பட்டை பழங்களில் நுங்கு மிகவும் நல்லது.

🌞🌞🌞🌞🌞🌞 

தவிர்க்க வேண்டியவை:-

அதிக காரம், எண்ணெய் பொருட்கள், தயிர், புளித்த உணவு வகைகள், குளிர்சாதன பொருட்கள், மதுபானங்கள். கோழி கறி,மைதா உணவுகள், எண்ணையில் பொறித்த உணவுகள் ..

🌞🌞🌞🌞🌞🌞

தினமும் செய்ய வேண்டியவை..

உடலின் நீர் சக்தி குறையாமல் பார்க்க வேண்டும் –தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும் ..

🌞🌞🌞🌞🌞🌞

கருங்காலி தண்ணீர் என்று மூலிகை குடிநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் தண்ணீரை பருகுதல் நலம்..

மதியம் ஒரு மணி நேரம் படுத்துறங்குதல் 

– பகல் உறக்கம் 

– இந்த வெயில் காலத்தில் நல்லது...

இரவும் சீக்கிரம் தூங்க வேண்டும்..

🌞🌞🌞🌞🌞🌞

வியர்வை அதிகம் வர வைக்கும் எந்த பயிற்சியும் செய்ய கூடாது

தேவை என்றி வெளியில் அலையவே கூடாது

கொளுத்தும் அனல் காற்றை வென்றெடுக்க சொல்லும் ரகசியம்

எண்ணெய் குளியல் 

🌞🌞🌞🌞🌞🌞 

நல்லெண்ணெய் தேய்த்து அதன் விதி முறைப்படி வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் நாம் அக்னியை வெல்லலாம்.

🌞🌞🌞🌞🌞

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...