Sunday, May 22, 2022

இந்திய விண்வெளி ஆய்வு மையம்-விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC).

இந்திய விண்வெளி ஆய்வு மையம்-விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC).

செயற்கைக்கோள் ஏவு ஊர்திகளை (Satellite Launch Vehicle) மேம்படுத்தவும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களுக்காகவும் முதன்மையான மையம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆகும். வானூர்திக்கலை (aeronautics), வான் பயண மின்னணுவியல் (avionics), கூட்டமைப் பொருள்கள் (composites), கணினி, தகவல் தொழில்நுட்பம், உருவகப்படுத்துதல் (simulations) உள்ளிட்ட பல துறைகளில் இங்கு ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகம ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவிற்கு சோம்நாத் தலைவராக உள்ளார்.

இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.[1] இஸ்ரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகிணியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத் தக்க ஜி. எஸ். எல். வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் இஸ்ரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. தனது ஏவுகலங்களையும் ஏவுமிடங்களையும் தனது செயற்கைக்கோள் ஏவுதிறனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. புவியியைவு செயற்கைக் கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி) மேம்படுத்தி முழுமையும் இந்தியப் பொருட்களால் கட்டமைப்பதும் மனிதரியக்கு விண்வெளித் திட்டங்கள், மேலும் பல நிலவு புத்தாய்வுகள் மற்றும் கோளிடை ஆய்வுக்கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டுள்ளது. தனது பல்வேறு பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குவியப்படுத்திய மையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது. பன்னாட்டு விண்வெளிச் சமூகத்துடன் பல இருவழி மற்றும் பல்வழி உடன்பாடுகளைக் கண்டு கூட்டுறவாக செயல்படுகிறது.


இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920களில் கொல்கத்தாவில் அறிவியலார் சிசிர் குமார் மித்திராவின் செயல்பாடுகளில் துவங்கியதாகக் கொள்ளலாம்; மித்திரா தரையளாவிய வானொலி அலைகள்மூலம் அயனி வெளியை ஆய்வு செய்யச் சோதனைகளை நிகழ்த்தினார். பின்னர், இந்திய அறிவியலாளர்கள் சி. வி. ராமன்மேக்நாத் சாகா போன்றோர் விண்வெளி அறிவியலுக்குப் பயனாகும் அறிவியல் கொள்கைகளை அளித்து வந்தனர். இருப்பினும் 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய அமைப்புசார் ஆய்வுகளுக்கு இரு இந்திய அறிவியலாளர்கள் வழி நடத்தினர்: விக்கிரம் சாராபாய்— அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவியவர்—மற்றும் ஹோமி ஜெஹாங்கீர் பாபா, 1945இல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவன இயக்குனராகத் துவக்கியவர். விண்வெளித் துறையில் துவக்கத்தில் அண்டக் கதிரியக்கம், உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், கோலார் சுரங்கங்களில் துகள் சோதனைகள் மற்றும் உயர் வளிமண்டலம் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

1950இல் இந்திய அரசில் புதியதாக உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் துறைக்கு ஓமி பாபா செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னரே இத்துறையில் ஆய்வுக்கு அரசு ஆதரவு கிட்டியது. அணுவாற்றல் துறை இந்தியாவெங்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கியது. 1823இல் கொலாபாவில் துவங்கப்பட்ட வானாய்வு நிலையத்தில் புவியின் காந்தப் புலம்குறித்து ஆயப்பட்டு வந்தது. வானிலையியலில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மதிப்புமிக்க தகவல்கள் திரட்டப்பட்டன. 1954ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநில வானாய்வு மையம் நிறுவப்பட்டது. 1957ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஐதராபாத்தில் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ரங்க்பூர் வானாய்வு மையம் நிறுவப்பட்டது. இந்த இரு மையங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவியல் கூட்டுறவுடன் இயங்கின. விண்வெளித்துறை வளர்ச்சிக்குத் தொழில்நுட்ப ஆதரவாளராக விளங்கிய அந்நாள் இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் பங்கும் இருந்தது 1957இல் சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாக இசுப்புட்னிக் 1ஐ விண்ணில் செலுத்தியதும் மற்ற நாட்டவரும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்த தூண்டுதலாக அமைந்தது. 1962ஆம் ஆண்டில் விக்கிரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டில் இக்குழுவிற்கு மாற்றாக இஃச்ரோ நிறுவப்பட்டது.


ஆய்வு மையங்கள்

மையம்அமைவிடம்விவரம்
யற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்அகமதாபாத்இங்கு ஆய்வுப் படிப்புக்கள் மேற்கொள்ளப்படும் சில துறைகள்: சூரிய கோள்களின் இயற்பியல், அகச்சிவப்பு வானியல், புவி-அண்ட இயற்பியல், மின்ம இயற்பியல், வானியற்பியல்தொல்பொருளியல், மற்றும் நீரியல் உதயப்பூரில் உள்ள ஆய்வகமொன்றும் இந்த மையத்தின் கீழ் இயங்குகிறது.
குறைகடத்தி ஆய்வகம்சண்டிகர்குறைகடத்தி தொழில்நுட்பம், நுண் இலத்திரன் இயந்திர அமைப்புக்கள், -குறைகடத்தி செயன்முறை தொடர்புடைய செயன்முறை தொழில்நுட்பங்கள் குறித்த துறைகளில் ஆராய்ச்சியும் மேம்படுத்தலும் கையாளப்படுகின்றன.
தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம்சித்தூர்என்.ஏ.ஆர்.எல் வளிமண்டல அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியலில் அடிப்படை மற்றும் பயன்முறை ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
விண்வெளி பயன்முறை மையம்அகமதாபாத்இந்த மையத்தில் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தும் வகையிலான பல கூறுகள் ஆராயப்படுகின்றன. இங்கு ஆய்வு செய்யப்படும் துறைகளில் சில: புவியளவையியல்செயற்கைக்கோள் மூலமான தொலைதொடர்புஅளக்கையியல்தொலையுணர்தல்வானிலையியல், சுற்றுச்சூழல் மேற்பார்வை ஆகியன. கூடுதலாக தில்லி செயற்கைக்கோள் புவி மையத்தையும் இந்த மையமே இயக்குகிறது.[23]
வட கிழக்கு விண்வெளி பயன்முறை மையம்சில்லாங்வட கிழக்கு மாநிலங்களுக்கு வளர்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமுகமாக தொலையுணர்தல், புவியியல் தகவல் முறைமை, செயற்கைக்கோள் தொலைதொடர்பு துறைகளில் குறிப்பிடப்பட்ட சில திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.

சோதனை மையங்கள்

மையம்அமைவிடம்விவரம்
திரவ உந்துகை அமைப்பு மையம்பெங்களூரு, வலியமலா (திருவனந்தபுரம்), மற்றும் மகேந்திரகிரி (திருநெல்வேலி மாவட்டம்)திரவ உந்துகை அமைப்பு மையங்களில் திரவ உந்துகை கட்டுப்பாடு பொதிகைகளை சோதனைகளும் நடைமுறைப்படுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் ஏவுகலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கான பொறிகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. சோதனைகள் பெரும்பாலும் மகேந்தரகிரியில் நடத்தப்படுகின்றன. இங்கு துல்லிய ஆற்றல்மாற்றிகள் கட்டமைக்கப்படுகின்றன.

கட்டமைப்பு மற்றும் ஏவல் மையங்கள்

மையம்அமைவிடம்விவரம்
இஸ்ரோ செயற்கைகோள் மையம்பெங்களூருஇஸ்ரோவின் முதன்மை செயற்கைக்கோள் தொழில்நுட்ப தளமான இங்கிருந்து எட்டு விண்வெளித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டப் பொருட்களைக் கொண்டே விண்ணோடங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இங்குதான் ஆரியபட்டாபாசுகராஆப்பிள், மற்றும் ஐஅர்எஸ்-1A கட்டப்பட்டன; இந்திய தொலையுணர் செயற்கைக்கோளும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி கோள்களும் தற்போது வடிவமைக்கப்படுகின்றன.[24]
மின்-ஒளியியலான அமைப்புகளுக்கான ஆய்வகம்-LEOSபெங்களூருஅனைத்து செயற்கைக்கோள்களும் தேவையான அணுகுமுறை உணரிகள் மேம்படுத்தபடுகின்றன. அனைத்து இஃச்ரோ செயற்கைக்கோள்களுக்கும் படப்பிடிப்புக் கருவிகளுக்குமான அதி துல்லிய ஒளியியல் இங்குள்ள ஆய்வகத்தில் தான் மேம்படுத்தப்படுகின்றன. இது பெங்களூருவின் புறநகர் பீன்யா தொழிற் பேட்டையில் அமைந்துள்ளது.
சதீஸ் தவான் விண்வெளி மையம்ஸ்ரீஹரிக்கோட்டாபல துணை மையங்களைக்கொண்டு இந்தியாவின் செயற்கைக்கோள்களை ஏவுமிடமாக ஸ்ரீஹரிக்கோட்டா தீவு விளங்குகிறது. இது ஆய்வு விறிசுகளை ஏவும் முதன்மைத் தளமாகவும் உள்ளது. மேலும் இங்குதான் இந்தியாவின் மிகப்பெரும் திண்ம உந்துகை விண்வெளி ஊக்கித் தொகுதியும் (SPROB) நிலைமின் சோதனை மற்றும் மதிப்பீட்டு வளாகமும் (STEX) அமைந்துள்ளன.[24]
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்திருவனந்தபுரம்இஸ்ரோவின் மிகப்பெரும் வளாகமாக விளங்கும் இந்த மையம் முதன்மை தொழில்நுட்ப மையமாகவும் செயற்கைக்கோள் ஏவுகலம் - 3 மேம்பட்ட துணைக்கோள் ஏவுகலம், மற்றும் முனைய துணைக்கோள் ஏவுகலம் தொடர் ஏவுகலங்களை வடிவமைத்த மையமாகவும் உள்ளது. இந்த வளாகத்தில் தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையமும் ரோகினி ஆய்வு விறிசுத் திட்ட அலுவலகமும் உள்ளன. இங்கு ஜி. எஸ். எல். வி தொடர் ஏவு கலங்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையம்திருவனந்தபுரம்இந்த நிலையம் ஆய்வு விறிசுகளை ஏவிவிட பயன்படுத்தப்படுகிறது.

சுவடு தொடரல் மற்றும் கட்டளை மையங்கள்

மையம்அமைவிடம்விவரம்
இந்திய ஆழ் விண்வெளி பிணையம் (IDSN)பெங்களூருஇந்தப் பிணையம் விண்கல நலத்தகவல்களையும் ஏற்புச்சுமைத் தகவல்களையும் நிகழ்நிலையில் பெற்று, அலசி, பாதுகாப்பதுடன் வேண்டுவோருக்கு வழங்குகிறது. இதனால் நிலவிற்கும் அப்பாற்பட்ட, தொலைதூரத்தில் உள்ள செயற்கைக்கோள்களையும் தொடரவும் மேற்பார்வையிடவும் முடியும்.
தேசிய தொலையுணர்வு மையம்ஐதராபாத்இந்த மையம் இயற்கை வளங்களை மேலாண்மை செய்திட தொலையுணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; வான்வெளி அளக்கவியலுக்கும் பயன்படுத்துகிறது.[22] இதன் மையங்கள் ஐதராபாத்தில் பாலாநகரிலும் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள ஷாத் நகரிலும் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் தேராதூனில் இயங்கும் இந்திய தொலையுணர்வுக் கழகம் பயிற்சி வசதிகளை அளிக்கிறது.[22]
இஸ்ரோ தொலைப்பதிவு, சுவடுதொடரல் மற்றும் கட்டளை பிணையம்பெங்களூரு (தலைமையகம்) மற்றும் இந்தியாவிலும் உலகெங்கும் பல தரை நிலையங்கள்இந்த மையத்தில் மென்பொருள் மேம்பாடு, தரை நிலைய இயக்கம், சுவடுதொடரல், தொலைப்பதிவு மற்றும் கட்டளை (TTC) மேற்கொள்ளப்படுவதுடன் ஏற்பாட்டியல் ஆதரவும் அளிக்கிறது. இந்த மையத்தின் உலகளாவிய நிலையங்கள் போர்ட் லூயி (மொரிசியசு), பியர்சுலேக் (உருசியா), பியாக் (இந்தோனேசியா) மற்றும் புருணையில் உள்ளன.
தலைமைக் கட்டுப்பாட்டு மையம்ஹாசன்கருநாடகம்புவிநிலை துணைக்கோள் சுற்றுப்பாதை ஏற்றம், ஏற்புசுமை சோதனை, மற்றும் சுற்றுப்பாதையில் துணைக்கோளை நிலையாக வைத்திருக்கும் பராமரிப்பு செயல்பாடுகள் ஆகியவை இந்த மையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன.[25] இந்த மையத்திற்கு இக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக தரை நிலையங்களும் துணைக்கோள் கட்டுப்பாட்டு மையமும் (SCC) கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கு பேரிடர் மீட்பு நிலையமாக இரண்டாவது முற்றிலும் ஒத்த வசதி 'MCF-B' , போபாலில் கட்டப்பட்டு வருகிறது.

மனிதவள மேம்பாடு

மையம்அமைவிடம்விவரம்
இந்திய தொலையுணர்வுக் கழகம் (IIRS)தேராதூன்இந்தியத் தொலையுணர்வுக் கழகம் இந்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தனிப்பட்ட கல்விநிலையமாகும். இது தொலையுணர்வு, புவித்தகவல் இயல், புவியிடங்காட்டி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மேல்நிலை படிப்பு வழங்கும் முன்னோடி கல்வி நிலையமாக விளங்குகிறது. இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தும் கற்பிக்கப்படுகிறது. இத்துறைகளில் பல ஆய்வுத்திட்டங்களையும் மேற்கொள்கிறது.
இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் (IIST)திருவனந்தபுரம்இந்தக் கல்வி நிலையத்தில் விண்வெளிப் பொறியியல், வான்பயண இலத்திரனியல் மற்றும் இயற்பியல் கல்வித்திட்டங்களில் பட்ட மற்றும் பட்டமேற்படிப்புக்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையத்தின் முதல் தொகுதி மாணவர்கள் சூலை 2011இல் இஃச்ரோவின் பல்வேறு மையங்களில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
மேம்படுத்தல் மற்றும் கல்விக்கான தொடர்பியல் பிரிவுஅகமதாபாத்இந்த மையம் பெரும்பாலும் இன்சாட் திட்டத்துடன் ஒருங்கிணைந்து கல்வி, ஆராய்ச்சி, மற்றும் பயிற்சிகளுக்குப் பணி புரிகிறது. இதன் முதன்மை பணிகளாக சிற்றூர்களுக்கான கிராம்சாட் மற்றும் கல்விக்கான எடுசாட் திட்டங்களை செயற்படுத்துவதாகும். இதன் கீழேயே பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான தொடர்பு அலைவரிசை (TDCC) இயங்குகிறது.

மகேந்திர கிரி

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 47க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு 600 பேர் நிரந்தரமாகவும் 1000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கடுங்குளிர் இயந்திரம் உருவாக்கம் மற்றும் அதன் சோதனை, திரவ செலுத்து வாகனம் உருவாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்து தகுதிப்படுத்துதல் ஆகிய பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.







இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...