Friday, June 17, 2022

10, 12ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் தேதி திடீர் மாற்றம்.

10, 12ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் தேதி திடீர் மாற்றம்.

தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in, tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து 10,11,12ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தாமதமாகவே தொடங்கின.


தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெற்றது.


பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளதை அடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளனர். ஜூன் 20 காலை 9 .30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு 

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஜூன் 20ல் ரிசல்ட் 

20ஆம் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஜூன் 20 ஆம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளும் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.

இணைய தள முகவரி 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2022 திங்கட்கிழமை அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. மேல்நிலை இரண்டாமாண்டு 20.06.2022, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in,www.dge.tn.gov.in

எப்படி தெரிந்து கொள்வது 

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட் 

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...