Tuesday, June 14, 2022

இன்று நிகழும் ஸ்ட்ராபெரி எனும் சூப்பர் மூன் நிகழ்வு.

இன்று நிகழும் ஸ்ட்ராபெரி எனும் சூப்பர் மூன் நிகழ்வு.


அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி என வர்ணிக்கப்படும் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவு வானில் தெரியவுள்ளது. ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வின்போது வானத்தில் உள்ள முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது இந்த அரிய நிகழ்வு நடப்பதாக கூறும், நாசா விஞ்ஞானிகள், இந்தியாவில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெரியாது என்றும், எனினும் பொதுமக்கள் இதனை இணையத்தின் வாயிலாக காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் என்றால் என்ன?

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும். இச்சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும். இதுவே “சூப்பர் மூன்”. தற்போதும் இதே நிகழ்வு தான் நிகழவுள்ளது. ஆனால் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது அந்த சூப்பர்மூன் “இளஞ்சிவப்பு” நிறத்தில் ஒளிரும். இதைத்தான் “ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” என்று அழைக்கின்றனர்.


ஆண்டின் மிகத் தாழ்ந்த நிலவு

space.com கூற்றின் இன் படி, இந்த 2022 ஆண்டின் மிகத் தாழ்ந்த முழு நிலவாக இது இருக்கும். இது அடிவானத்திலிருந்து 23.3 டிகிரி கோணத்தில் உதிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. 

பொதுவாக ஜூன் 21 ஆம் தேதி பூமியின் வட துருவத்திற்கு  மிக நீண்ட சூரிய ஒளி உள்ள நாளாக இருக்கும். இதை சம்மர் சால்ஸ்டாய்ஸ் (summer solstice) என்பர். தென்துருவத்திற்கு நீண்ட இருளாக இருக்கும். இந்த நாளில் பூமியின் கடகரேகைக்கு மேல் சூரியன் உதிக்கும். அதாவது 23.4 டிகிரி மேல் சூரியன் உதிக்கும். அதற்கு எதிரே நிலவு உதிப்பதால் பூமிக்கு மிக அருகிலேயே உதிப்பது போல் இருக்கும்.

தொலைநோக்கியைப் பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் மற்றும் மலைகளைக் கண்டறிய இது மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பளிக்கும் என்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியது. 


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...