குளோரோபில் நிறமிகள் ஆய்வு செய்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கரிம வேதியியலாளர் ஹான்ஸ் பிஷ்ஷர் பிறந்த தினம் இன்று (ஜூலை 27, 1881).
ஹான்ஸ் பிஷ்ஷர் (Hans fischer) ஜூலை 27, 1881ல் ஜெர்மன் பிராங்பேர்ட்டின் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்டர் யூஜென் பிஷ்ஷர், வைஸ்பேடனில் உள்ள கல்லெ& கோ நிறுவனத்தின் இயக்குனர், மற்றும் ஸ்டுட்கார்ட் தொழில்நுட்ப உயர்நிலை மற்றும் அண்ணா ஹெர்டெகன் பள்ளிகளில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். இவர் ஸ்டூட்கார்ட்டில் ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். பின்னர் 1899ம் ஆண்டில் வைஸ் பேடனில் "ஹுமனிஸ்டிஸ்செஸ் ஜிம்னாசியம்" மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றார். முதலில் இவர் லோசான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் மருந்துவம் படித்து, பின்னர் மார்பர்க்கில் படித்தார். இவர் 1904ல் பட்டம் பெற்றார். 1908 ஆம் ஆண்டில் இவர் எம்.டி. படிப்பிற்காக தகுதிபெற்றார். பிஷ்ஷர் 1935ல் வில்ட்ரூட் ஹூப்பை திருமணம் செய்து கொண்டார்.
முதன்முதலில் மூனிச்சில் உள்ள மருத்துவ நிலையத்திலும், பின்னர் எமில் ஃபிஷ்ஷரின் கீழ் பர்ஸ்ட் பெர்லின் கெமிக்கல் இன்ஸ்டிடியூட்டிலும் பணிபுரிந்தார். 1911ல் முனிச் திரும்பி ஒரு வருடத்திற்கு பின் அக மருத்துவவியல் பிரிவில் விரிவுரையாளராகத் தேர்வானார். 1913ம் ஆண்டில் முனிச்சில் உள்ள உடலியல் கல்விநிறுவனத்தில் உடலியல் பிரிவில் விரிவுரையாளராக ஆனார். 1916ம் ஆண்டில் இன்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல் பேராசிரியராக ஆனார். அங்கிருந்து இவர் 1918ல் வியன்னா பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.
1921ம் ஆண்டு முதல் முனிக்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராக இருந்தார். பிஷ்ஷரின் விஞ்ஞானப் பணிகள் பெரும்பாலும் இரத்த, பித்த நீர், மற்றும் இலைகளின் குளோரோபில் நிறமிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு, இந்த நிறமிகளை உருவாக்கும் பைரொல்லின் வேதியியலுடன் தொடர்புடையவையாக இருந்தன. இவரது பிலிரூபின் மற்றும் ஹெமின் உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1930ல் நோபல் பரிசு பெற்றார். 1976ம் ஆண்டில் இவரின் நினைவாக ஃபிஷர் நிலவுக் குழிகள் என நிலவுக் குழிக்கு பெயரிடப்பட்டது.
அறிவியல் லியோபோல்டினாவின் அகாடெமி, தனியார் கவுன்சிலர், லிபிக் மெமோரியல் பதக்கம், வேதியியல் நோபல் பரிசு, கௌரவ டாக்டர் பட்டம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனின் ராயல் சொசைட்டி டேவி மெடல் போன்ற சிறப்புகளை பெற்றுள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில் இவர் தனது நிறுவனம் மற்றும் தனது உழைப்பு அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியால் ஜெர்மனி மார்ச் 31, 1945ல் ஜெர்மன் முனிச் நகரில் தனது 63வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
இது போன்ற தகவல் பெற
இது போன்ற தகவல் பெற
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment