Saturday, October 29, 2022

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்.

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்:

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

முன்னதாக பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது பெண்கள் உயர்கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

புதுமைப் பெண் திட்டம் :

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் புதிய திட்டத்தை கடந்த செப்டம்பர் 5 அன்று முதல்வர் தொடங்கி வைத்தார். அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும். நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். தற்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

யார் விண்ணப்பிக்கலாம்?

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் தங்கள் கல்லூரியின் முதல் ஆண்டில் விண்ணப்பிக்கலாம்.தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த தேதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் உதவித்தொகை பெற http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் உதவிக்கு :

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, October 27, 2022

நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா.

நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  பிறந்த நாள் விழா.

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 27.10.2022ல் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  ஓய்வு பெற்ற கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவர், IGCAR கல்பாக்கம் டாக்டர் ஆர். வெங்கடேசன், கலந்து கொண்டு  இந்திய அணுக்கருவியலின் தந்தை,  ஓமி பாபா  சாதனை குறித்து பேசினார்.  மேலும் அவர் பேசுகையில் மேலை நாடுகளுக்கு இணையாக, உலகின் 12 வது நாடக அணுசக்தியில் உயர வழிவகுத்தவர் ஓமி பாபா. ஐன்ஸ்டீனின் ஆற்றல் சமன்பாட்டை வைத்து தோரியும் அணுவை பயணிப்படுத்தி ஆற்றல் தயாரிக்கும் முறையை உருவாக்கியவர் ஓமி பாபா. ஏனென்றால் உலகிலேயே 2 வது அதிக தோரியம் கிடைக்கும் நாடு இந்தியா ஆகும். அணு கழிவுகள் அதன் கதிரியக்கம் வெளியிட மிக நீண்ட காலம் எடுப்பதால், பாதுகாப்பாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவாக எடுத்து கூறினார். நிலவு ஏன் புவி ஈர்ப்பு விசையால் கீழே விழாமல் சுற்றுகிறது, செயற்கைக்கோள் எவ்வாறு சுற்றுகிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் புவி ஈர்ப்பு விசையால் தண்ணீரின் வேகம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பல பரிசோதனை மூலம் மாணவர்களே செய்ய வைத்து தெளிவாக விளக்கினார்.  

தலைமை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்பொது விழிப்புணர்வு பிரிவு, IGCAR கல்பாக்கம்ஜலஜா மதன்மோகன்பேசுகையில் உலகிலே இரண்டாவது அதிகமான தோரியம் இந்தியாவில் உள்ளது. இதை வைத்து எவ்வாறு யுரெனியமகா மாற்றி அணு சக்தி மூலம் மின்சாரம் உருவாகும் முறையை இந்தியாவில் பயன்படுத்தினர்என்பதை எடுத்துக் கூறினார். யுரேனியம்-233 யுரேனியம்-235, புளூட்டனியம்  மூன்றையும் பயன்படுத்தும் அணு உலை உலகிலேயே கல்பாக்கதில் மட்டுமே உள்ளது என்பது மாபெரும் சாதனையாகும் என்பதை எடுத்துக் கூறினார். இந்தியாவில் அணு உலைகள் தொடங்கபட்ட  விதம் மற்றும் கல்பாக்கம் அணுஉலையில் எவ்வாறு யுரேனியம் அணுவை செறிவூட்டி  மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கினார். உலகில் இந்திய அணுஉலை எவ்வாறு சிறப்புத்தன்மை வாய்ந்து என்பதையும், இந்தியாவில் எத்தனை அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது அங்கு என்னொன்ன ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது என்பதை விளக்கினார்.

கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு அறிவியல் உதவியாளர் IGCAR கல்பாக்கம், ராமு மற்றும் பார்த்திபன் அணு உலையில் நடக்கும் வினையை அணு உலை மாதிரிகளுடன் தெளிவாக விளங்கினார். அணு உலைகளில் யுரேனியம் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும், காமினி பரிசோதனை அணு உலைகளில் எவ்வாறு பரிசோதனை நடைபெறுகிறது என்பது பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்.

முன்னதாக கல்லூரி துணை முதல்வர் குமாரராமன் அனைவரையும் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருத்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.  கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன்,   கல்லூரி செயலர்  பொன்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Wednesday, October 26, 2022

புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 11 வரை சிறப்பு முகாம்கள்- மாவட்ட ஆட்சியர் தகவல்.

புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 11 வரை சிறப்பு முகாம்கள்- மாவட்ட ஆட்சியர் தகவல்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவங்கப்பட்டது.

இதுவரை இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம்  ஆண்டில் பயிலும் 1.13 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைத்தளத்தில் https://www.puthumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத் திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவராமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மைதகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தின் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம், மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல் படிப்பு /தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி திேக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்மண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தவைலர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Tuesday, October 25, 2022

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்.

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...