நேரு நினைவு கல்லூரியில் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா.
நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 27.10.2022ல் இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவர், IGCAR கல்பாக்கம் டாக்டர் ஆர். வெங்கடேசன், கலந்து கொண்டு இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா சாதனை குறித்து பேசினார். மேலும் அவர் பேசுகையில் மேலை நாடுகளுக்கு இணையாக, உலகின் 12 வது நாடக அணுசக்தியில் உயர வழிவகுத்தவர் ஓமி பாபா. ஐன்ஸ்டீனின் ஆற்றல் சமன்பாட்டை வைத்து தோரியும் அணுவை பயணிப்படுத்தி ஆற்றல் தயாரிக்கும் முறையை உருவாக்கியவர் ஓமி பாபா. ஏனென்றால் உலகிலேயே 2 வது அதிக தோரியம் கிடைக்கும் நாடு இந்தியா ஆகும். அணு கழிவுகள் அதன் கதிரியக்கம் வெளியிட மிக நீண்ட காலம் எடுப்பதால், பாதுகாப்பாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவாக எடுத்து கூறினார். நிலவு ஏன் புவி ஈர்ப்பு விசையால் கீழே விழாமல் சுற்றுகிறது, செயற்கைக்கோள் எவ்வாறு சுற்றுகிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் புவி ஈர்ப்பு விசையால் தண்ணீரின் வேகம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பல பரிசோதனை மூலம் மாணவர்களே செய்ய வைத்து தெளிவாக விளக்கினார்.
தலைமை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், பொது விழிப்புணர்வு பிரிவு, IGCAR கல்பாக்கம், ஜலஜா மதன்மோகன், பேசுகையில் உலகிலே இரண்டாவது அதிகமான தோரியம் இந்தியாவில் உள்ளது. இதை வைத்து எவ்வாறு யுரெனியமகா மாற்றி அணு சக்தி மூலம் மின்சாரம் உருவாகும் முறையை இந்தியாவில் பயன்படுத்தினர்என்பதை எடுத்துக் கூறினார். யுரேனியம்-233 யுரேனியம்-235, புளூட்டனியம் மூன்றையும் பயன்படுத்தும் அணு உலை உலகிலேயே கல்பாக்கதில் மட்டுமே உள்ளது என்பது மாபெரும் சாதனையாகும் என்பதை எடுத்துக் கூறினார். இந்தியாவில் அணு உலைகள் தொடங்கபட்ட விதம் மற்றும் கல்பாக்கம் அணுஉலையில் எவ்வாறு யுரேனியம் அணுவை செறிவூட்டி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கினார். உலகில் இந்திய அணுஉலை எவ்வாறு சிறப்புத்தன்மை வாய்ந்து என்பதையும், இந்தியாவில் எத்தனை அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது அங்கு என்னொன்ன ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது என்பதை விளக்கினார்.
கதிரியக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு அறிவியல் உதவியாளர் IGCAR கல்பாக்கம், ராமு மற்றும் பார்த்திபன் அணு உலையில் நடக்கும் வினையை அணு உலை மாதிரிகளுடன் தெளிவாக விளங்கினார். அணு உலைகளில் யுரேனியம் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும், காமினி பரிசோதனை அணு உலைகளில் எவ்வாறு பரிசோதனை நடைபெறுகிறது என்பது பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்.
முன்னதாக கல்லூரி துணை முதல்வர் குமாரராமன் அனைவரையும் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் சிறப்பு விருத்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பேராசிரியர் இரா.கபிலன் நன்றியரை வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
🛑🤔 POLYTECHNIC TRB EXAM Materials and Model Questions- English.
🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.
🛑🤔 ஒரு நாளைக்கு ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும் உயிரினம் எது?
SSC- 3261 மத்திய அரசுப் பணிக்கு அக்.25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

இன்றைய சிறப்பு அழைப்பாளர் மாணவரின் நலன் மீது அக்ககரைக் கொண்டு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார். வாழ்த்துகள் முனைவர் ரமேஷ் Sir.
ReplyDeleteThank you 🙏
Delete