Friday, November 18, 2022

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவியது. தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து உள்ளது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது. இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...