Wednesday, November 9, 2022

பல்கலைக்கழக அளவில் நேரு நினைவுக் கல்லூரி அணியினர் வெற்றி

பல்கலைக்கழக அளவில் நேரு நினைவுக் கல்லூரி அணியினர் வெற்றி




பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் டென்னிஸ் மற்றும் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் கடந்த 02.11.2022 முதல் 05.11.2022ம் தேதி வரை திருச்சி பிஷப் கல்லூரியில் போட்டியில் நடைபெற்றது. இப் போட்டியில் நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி மகளிர் மற்றும் ஆடவர் பிரிவினர் இரண்டாம் இடம் பிடித்தனர்.


 போட்டி விவரம்

காவேரி மகளிர் கல்லூரி அணியை வீழ்த்தி நேரு நினைவு கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி அணி நேரு நினைவு கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

ஆடவர் டென்னிஸ் அரை இறுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி நேரு நினைவு கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி அணி நேரு நினைவு கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரை கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியம் அவர்கள், செயலர் பொன். ரவிச்சந்திரன் அவர்கள், முதல்வர் முனைவர் பொன். பெரியசாமி அவர்கள் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள், உடற் கல்வி இயக்குனர்கள் முனைவர் சகாய லதா ராணி, செந்தில்குமார் மற்றும் சந்திரன் பாராட்டினர்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...