Monday, December 26, 2022

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா.






புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 26-12-2022 திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா பொன் பெரியசாமி அவர்கள், கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரிச் செயலர் பொன்.இரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் (அரசு மருத்துவக் கல்லூரி . இயக்குனர்) தேனி. கலந்துகொண்டு தேசியக் கொடியையும் கல்லூரி கொடியையும் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கினர். நிகழ்வில் கல்லூரி முகமைக் குழு உறுப்பினர்கள் திருமதி மாலா பாலசுப்ரமணியன், திருமதி ஷியாமளா ரவிச்சந்திரன், தேன்மொழி தங்க ராஜா, திறன் மேம்பாட்டு பயிற்சி மைய இயக்குனர் பா. சூர்யா ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம்அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்.


அதனைத் தொடர்ந்து மாணவிகள் ஏழு வண்ணங்களில் சீருடை அணிந்து அணி வகுப்பு நடாத்திக் காட்டினர். பின்னர் வினோத் குமார், கருணாகரன், பூவரசன், மோனிஷா, குரு பிரியா போன்ற மாணவர்கள் ஒலிம்பிக் விளக்குகளை ஏற்றி வைத்து விளையாட்டுத் திடலில் உலா வந்தனர். பின்னர். ஐஸ்வர்யா 1MBA விளையாட்டு உறுதி மொழியைக் கூறினார். நிகழ்வினைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா மூக்கப் பிள்ளைக் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா. பொன் பெரியசாமி அவர்கள் வரவேற்புரை நல்கினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. சகாய லதா ராணி அவர்கள் ஓராண்டு கால விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டினார்.


கல்லூரி தலைவர் பொன் .பாலசுப்பிரமணியன் அவர்கள் தொடக்க விழாப் பேருரை ஆற்றினார். உரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து படிப்பதோடு இருந்துவிடாமல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று அறிவுரை கூறினார். கல்லூரிச் செயலர் பொன் .ரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில் மாணவர்களின் செயல் திறனை கண்டு வியந்து போகிறேன். வரும் காலங்களில் இன்னும் அதிகமான மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்ட புத்தனாம்பட்டிக்
கல்லூரி என்றும் தடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று கூறினார்.




தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மருத்துவர் A. மீனாட்சி சுந்தரம் பேசுகையில் நாம் யாரோடும் ஒப்பிடக்கூடாது. அவரவர் திறனை அவரே வளர்த்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க தவறக் கூடாது. குறிப்பாக ஹெல்மெட் அணிவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். பின்னர் தொடர்ந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 25,000 பரிசுத்தொகைகளும் சுழர் கோப்பைகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. ஆண்களுக்கான Over all championship பட்டம் மு. வினோத் குமார் இயற்பியல் துறை மாணவனுக்கு வழங்கப்பட்டது. பெண்களுக்கான Over all championship பட்டம் சந்தியா வணிகவியல் துறை மாணவிக்கு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் முதலிடம் வணிகவியல் துறையும், இரண்டாமிடம் இயற்பியல் துறையும் பெற்றன.


நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் குமாரராமன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் திரு செந்தில் குமார் ஆங்கிலத் துறை பேராசிரியர் திரு சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் சி பிரபாகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
















இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...