Sunday, December 25, 2022

இன்று விழிப்புடன்‌ இரு--ச. மனோஜினி, NMC.

இன்று விழிப்புடன்‌ இரு-ச. மனோஜினி, NMC.


விழிப்புடன்‌ இரு:.    

இலட்சியம், இளமை, இளைஞன, இன்று இவைகளை பற்றி தெளிவாக காண்போம். இலட்சியம் இல்லாமல் வாழ்க்கை வாழ்வது எண்ணெய் இல்லாத விளக்குப்போன்து. இலட்சியம் என்ற விளக்கை உன் வாழ்வில் ஏற்றிவையுங்கள். உடனடி இலட்சியம், இடைக்கால இலட்சியம், எதிர்கால இலட்சியம் என இலட்சியத்தை மூன்றாக பிரிக்கலாம். 

விடியும் ஒவ்வொறு நாளும் ஒரு இலட்சியம் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்கால இலட்சியத்தை நோக்கியே உங்கள் நிகழ்கால இலட்சியம் இருந்தால் நிறைவாகவும் விரைவாகவும் அடையமுடியும்.

இன்று:                                        

 "இன்றைய‌ முயற்சி நாளைய வெற்றி"  என்பதை புரிந்துக்கொண்டு ஒவ்வொறு நாளையும் நல்ல செயலைக் கொண்டு அழகாக்க வேண்டும்.   "இன்று,நாளை, நேற்று"  நேற்று அவன் அப்படி பேசியிருக்க கூடாது என்று வருத்தப்பட்டு ஒரு பலனுமில்லை.  நாளையும் அதே போல வேறு யாரேனும்  அப்படி பேசிவிடக் கூடாது என்று பயம் கொண்டு வாழ்வதில் அர்த்மில்லை. இன்றைய நாளில் என் செயல் நன்றாக இருந்தால்  நாளை என்னைப் பற்றிய விமர்சனம் இருக்க வாயிப்பில்லை. நன்றாக சிந்தித்துப் பாருங்கள் இன்று இக்கணம் நம் கைகளில் உள்ளது அதை சரியாக பயன்படுத்தி நாளைய நாளை நன்றாக மாற்றுங்கள் . "இன்றை விதையுங்கள் நாளை நன்றாக முளைக்கும். ".

இளைஞன்: ‌.   


                     
இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியாவின் ஆணி வேர்கள்.      

இளைஞர்களிடம் வீரமில்லையா, பொருமையில்லையா, விவேகம் இல்லையா, திறமை தான் இல்லையா?   எல்லாம் இருந்தும் ஏதே ஒன்று இல்லை. இளையத்தலை முறையை நல்ல வழியில் தூண்டிவிட தான் யாருமில்லை.   


ஒரு விளக்கை ஏற்றினால் போதுமா எந்த இடத்தில் ஏற்றினால் அனையாமல் இருக்குமோ அந்த இடத்தில் தான் விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு இளைஞனும் அப்படி தான். எறியும் இளைஞனை நல்ல திசையில் தூண்டிவிட வேண்டும். ஆனால் சமூக ஊடகங்கள் இளைய சமூதாயத்தை தவறான பாதையில் திசைத்திருப்பி விடுகிறது. இன்றைய அரசுக்கு இளைஞர்களை எப்படி நல்வழி படுத்துவது, இந்தியாவை இளைஞர்கள் மூலம் எப்படி முன்னேற்றுவது என்று தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்து விட்டு வேலைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனை இளைஞர்கள் உணர்தால் இந்த நிலையை மாற்ற முடியும்.





ச. மனோஜினி, முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல், நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

  இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...