Sunday, January 15, 2023

மணிக்கு 21,506 கிமீ வேகம்.. பூமியை தாக்க வரும் சிறுகோள்..பேராபத்து ஏற்படுமா? நாசா பகீர் தகவல்-என்ன?

மணிக்கு 21,506 கிமீ வேகம்.. பூமியை தாக்க வரும் சிறுகோள்..பேராபத்து ஏற்படுமா? நாசா பகீர் தகவல்-என்ன?


வானில் தினமும் பல்வேறு அரிய நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் பூமியை நோக்கி 2022 ஒய்எஸ் 5 எனும் சிறுகோள் வேகமாக நகர்ந்து வருவதாக நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூறியுள்ளது. இன்றைய நிலவரப்படி பூமியில் இருந்து 5.9 மில்லியன் கிலோமீட்டர் வரும் இந்த சிறுகோள் மணிக்கு சுமார் 21,506 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்தா? இல்லையா? என்பது பற்றிய தகவலை நாசா வெளியிட்டுள்ளது.


பூமியை போல் ஏராளமான கிரகங்கள் உள்ளன. தற்போது பூமியில் மட்டும் மனிதர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அதிக சூடு, அதிக குளிர் அல்லது தண்ணீர் இல்லாதது உள்ளிட்டவற்றால் பிற கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சூரியனை பூமி உள்ளிட்ட ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருவது போல் சிறுகோள்கள், வால் நட்சத்திரங்கள் உள்ளிட்டவையும் சூரியனை சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது பூமிக்கு அருகே வந்து செல்வது உண்டு. இதனை முன்கூட்டியே நாசா கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பூமியை நெருங்கும் சிறுகோள் 

இந்நிலையில் தான் தற்போது நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022 YS5 எனும் சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்த சிறுகோள் 5.9 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை நெருங்குகிறது.

21,506 கிமீ வேகம் 

இப்போது இந்த 2022 YS5 சிறுகோள் மணிக்கு சுமார் 21,506 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. அதன்படி பார்த்தால் வினாடிக்கு 6 ஆயிரம் மீட்டர் தூரத்தை இந்த கோள் கடக்கிறது. இந்த சிறுகோள் என்பது 130 அடி அகலத்தில் விமானத்தை விட பெரியதாக உள்ளது. இது கவலையளிக்கும் வகையில் இருப்பதாக நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

ஆபத்து இருக்கா? 

ஏனென்றால் இது பூமியை தாக்கினால் பிரச்சனைகள் ஏற்படலாம் என நாசா எச்சரித்துள்ளது. மாறாக பூமியை நோக்கி வருவதில் இருந்து பாதையை மாற்றினால் பிரச்சனை என்பது இருக்காது. மாறாக பூமியை நோக்கி வந்தால் மக்களுக்கும், பொருட்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் என நாசா கூறியுள்ளது. மேலும் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து சிறுகோள் விலகும் பட்சத்தில் மாற்று பாதையில் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அச்சப்பட வேண்டுமா? 

ஒருவேளை சிறுகோள் பூமியை நோக்கி வருவதில் இருந்து விலகாவிட்டாலும் கூட நாசாவிடம் DART எனும் திட்டம் உள்ளது. வானில் இருந்து வரும் சிறுகோள்கள் பூமியை தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் உள்ளது தான் இந்த திட்டமாகும். இது பூமியை சிறுகோள்கள் தாக்காமல் பாதுகாப்பும் ஒரு தொழில்நுட்பமாகும். முன்னதாக நாசாவின் விண்கலத்தின் உதவியுடன் பூமியை நோக்கி வந்த சுமார் 525 அடி விண்கல் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் திசைதிருப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது.

Source By: Tamil oneindia


No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...