புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நட்சத்திர திருவிழா தொடக்கம்.
கி. பி. 1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாக கண்டறிந்து அதனை சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு தான் உலகை புரட்டிப் போட்ட நாள் என்பதை கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நட்சத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.
நட்சத்திர திருவிழாவை கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா பொன் பெரியசாமி தலைமை வகித்தார். முன்னதாக இயற்பியல் பேராசிரியர் இரா.கபிலன் வரவேற்புரை ஆற்றினார். இயற்பியல் பேராசிரியர் பொ .ரமேஷ் விழா ஏற்பாடுகளை செய்தார். சூரிய குடும்பம் பற்றி காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. கைபேசி வழியாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் கோளையும், நிலா, நட்சத்திரங்கள் மற்ற கோள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டது. இந்த நட்சத்திர திருவிழாவிற்காகஅதிநவீன தொலைநோக்கி வாங்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தொலைநோக்கிகள் மூலம் நிலா, நட்சத்திரங்கள் கண்டு களித்தனர். விண்வெளி நிகழ்வுகளை நேரடியாக காண்பது அறிவியல் அபூர்வங்களை புரிந்த கொள்ள எளியதாவும், மேலும் தெரிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டுவதாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வு ஜனவரி 8, 9 என மேலும் இரு நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும்.மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளது.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment