உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா.
தொடக்கமாக விடுதி காப்பாளர் முனைவர் அனிதா அனைவரையும் வரவேற்றார். இந்த மகளிர் தின நிலா திருவிழா நிகழ்ச்சியை தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தலைமை உரையில் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. சூரியன், நிலா, காற்று மற்றும் இயற்கை ஆகிய அனைத்துமே மனிதனுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோலவே மனிதனும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். நிலவின் இயக்கம், நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் குறித்தும் எடுத்துரைத்தார். பெண்கள் கடின உழைப்பின் மூலம் சிறந்த விளங்குகிறார்கள். அனைத்து மாணவிகளும் பல சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் முதலாக விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.
கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். அதில் நிலவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தான் அனைவருக்கும் தெரியும். இரண்டாவதாக வருபவர்களை உலகம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆகவே அனைவரும் தங்கள் துறையில் முதன்மையாக சிறந்த வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் மகளிர் தின சிறப்பு பரிசாக விடுதியை குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக மேம்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர் பொன்பெரியசாமி, விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கிய வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.
இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம் வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் மாணவிகள் அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள், ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 250 க்கு மேற்பட்ட மாணவிகள் முதல் முறையாக தொலைநோக்கி வழியாக நிலவு மற்றும் கோள்களை கண்டு களித்து வியப்படைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ கிளிப் மாணவிகள் ஒருங்கிணைத்தனர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment