Sunday, April 2, 2023

மறுபயன்பாட்டு ஏவுகணையை வெற்றிகரமாக தரையிறக்கிய ISRO.

மறுபயன்பாட்டு ஏவுகணையை வெற்றிகரமாக தரையிறக்கிய ISRO.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று (ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனையை (ஆர்எல்வி) வெற்றிகரமாக செய்துள்ளது. மறுபயன்பாட்டு ராக்கெட் வாகனத்தை வெற்றிகரமாக தரையிறக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் காலை 7.10 மணிக்கு ஆர்.எல்.வி உடன் புறப்பட்டு 4.5 கி.மீ உயரத்திற்கு பறந்தது. அதன் பின் திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே பூமியில் தரையிறங்கியது என்று கூறியுள்ளது. மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ எட்டிய முக்கிய மைல்கல் இது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை ஏவுவதற்கு பின்பற்றப்பட்ட தொழில்நுட்பம் உலகில் முதல் முறையாக இந்தியா பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இறக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் மூலம் 4.5 கிமீ உயரத்திற்கு ஏவுகணை எடுத்துச் செல்லப்பட்டு பின் திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே தரையிறங்கியது என்று இஸ்ரோ கூறியுள்ளது.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...