Monday, May 29, 2023

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எப்.-12 ராக்கெட் | GSLV F12.

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எப்.-12 ராக்கெட் | GSLV F12.

'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.

இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை (ஐ.ஆர்.என்.எஸ். எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆர் என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1 எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் செயலிழந்த செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆர் என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1 எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் செயலிழந்த செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.





.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...