Wednesday, July 5, 2023

ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு

ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு. 


இன்று 05.07.2023  மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற இஸ்ரோ இளநிலை விஞ்ஞானி பால சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று விளக்கங்களை அளித்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

 


நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி வழியாக சூரிய வடிகட்டி மூலம் சூரியன்  காண்பிக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் ஆனந்தராஜா  மற்றும் பாஸ்கரன், மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர்.இந்த விழாவில் 400க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.







இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...