Monday, July 3, 2023

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்.


03.07. 2023 திங்கள்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.  நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் மாணவர் இடையே நல்ல நட்பினை படிப்புக்காக மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆசிரியரின் அருமையையும் கல்லூரியின் பாரம்பரியத்தையும் குறித்து சிறப்புரை ஆற்றினர். 



அவரைத் தொடர்ந்து கல்லூரி செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன் அவர்கள் வாழ்வில்  வெற்றி பெற நம்பிக்கை என்ற தாரக மந்திரத்தை நம்முள் விதைக்க வேண்டும் என்று சிறப்புரை அற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து கல்லூரி துணை முதல்வர் முனைவர் குமாரராமன் மற்றும் கல்லூரி உள் தர கட்டுப்பாடு ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.சரவணன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தொடக்க விழாவினை தொடர்ந்து ஆங்கிலத் துறையின் தலைவர் முனைவர் தமிழ்மணி அவர்கள் கல்லூர் கல்லூரி வளாகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.



திருச்சி சைபர் காவல் துறை ஆய்வாளர் மோகன்ராஜ் அவர்கள் இணைய வழி சைபர் குற்றங்களை தடுக்கும் முறைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உபயோகம் இப்போது இளைஞர்கள் இடையே அதிகமாகி உள்ளது. இதன் வழியே முகம் தெரியாத ஆண், பெண்களிடம் தவறாக செய்தி அனுப்பி, அதன் மூலம் பணம் மோசடி நடக்கிறது. முகம் தெரியாத நபர்களுடன் சமூக வலைதளங்களில் வேண்டுதல் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில்  அமைக்கப்படும் நமது சுய புகைப்படத்தை மற்ற யாரும் எடுக்க இயலாத வழி அமைக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு, கடன் மற்றும் பொருட்கள் வாங்குவது பற்றிய தவறான தகவல்களை நம்பக் கூடாது. பாஸ்வேர்ட் வைக்கும் போது வலுவாக, யாரும் அறியாத வகையில் வைக்க வேண்டும். சைபர் குற்றங்களில் பெரும்பாலும் படித்த இளைஞர்களே அதிகமாக ஏமாறுகிறார்கள்.


ஒவ்வொருவருக்கும் சுய ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம். செல்போனுக்கு வரும் தேவையில்லாத லிங்குகளை தொடக்கூடாது. அதன் வழியாக செல்போன் மற்றும் அதில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது. மாய எண்களை உபயோகப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து பேசுவது போல் பேசி பணம் திருடப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் நமது நண்பர்கள் அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்று கேட்டு அனுப்புவது போல் திருடர்கள் அனுப்பி வருகிறார்கள். அந்த வதந்தி யாரும் நம்ப வேண்டாம். அந்த தகவலை உறுதி செய்து அதன் பிறகு பணம் அனுப்ப வேண்டும். மேலும் ஆதார் இணைக்க வேண்டும், மின் கட்டணம் செலுத்த வேண்டும், பேங்கில் அக்கவுண்ட் சரி செய்ய வேண்டும் என்று வரும் தவறான செய்திகள் மற்றும் அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.





அவரைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையின் அலுவலர் முனைவர் பிரபு தேசிய மாணவர் படை முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். முனைவர் பாலசுப்பிரமணியன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் புதுமை பெண் திட்டம் மற்றும் உதவிதொகை குறித்து எடுத்துரைத்தார். முனைவர் சி.பிரபாகரன் மற்றும் தா.பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.








இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...