Sunday, July 30, 2023

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி56 ராக்கெட்.

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி56 ராக்கெட்.

இன்று ஜூலை 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 6.30 மணிக்கு 7 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்  ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. மொத்தம் 7 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 56 ராக்கெட் கிளம்பியிருக்கிறது. 7 செயற்கைக்கோள்களில், சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவி நோக்கு செயற்கைகோள் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை, தொடர்ந்து விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி   வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியையும் மேற்கொண்டு  வருகிறது அந்த வகையில் இஸ்ரோ  , சிங்கப்பூருக்குச் சொந்தமான டி எஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த 7 செயற்கைகோள்களில், டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ) உட்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சிறிய வடிவிலான மற்றும் வர்த்தக ரீதியிலான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை வடிவமைத்து விண்ணில் செலுத்தி வருகிறது.  அந்த வகையில் ஏப்ரல் 22ம் தேதி வர்த்தக ரீதியிலான பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.












இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...