Saturday, July 29, 2023

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். அதன்படி 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில்பட்டியலிடப்பட்டுள்ளபள்ளிகளில் 9-ம் வகுப்புஅல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

 

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாகரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் மாதம்29-ந்தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்இந்த திட்டம் தொடர்பான விவரங்களை http://socialjustice.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...