Tuesday, August 29, 2023

நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன், சல்ஃபர் உள்பட பல தனிமங்களை கண்டுபிடித்த பிரக்யான் ரோவர்..!

நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன், சல்ஃபர் உள்பட பல தனிமங்களை கண்டுபிடித்த பிரக்யான் ரோவர்..!

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உள்ளிட்டவை ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், குரோமியம், சிலிக்கான் உள்பட பல தனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ முக்கிய தகவலை தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் வியந்துபோய் இந்தியாவை திரும்பி பார்க்கின்றன.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்வெளி திட்டத்தின் உந்துவிசை கலன் நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றி வருகிறது.

தற்போதைய நிலையில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன் வாயு இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் சல்பர் உள்பட பல தனிமங்கள் நிலவில் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த கருவி நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி உறுதி செய்துள்ளது. இதுதவிர அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. தற்போது நிலவில் ஹைட்ரஜன் வாயு இருக்கிறதா? என்பதை ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது'' என தெரிவித்துள்ளது. மேலும் இந்த தனிமங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட எல்ஐபிஎஸ் (Laser-Induced Breakdown Spectroscope) எனும் கருவி என்பது இந்தியாவின் தயாரிப்பாகும். பெங்களூரில் உள்ள எல்இஓஎஸ் லேசர் எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் லேப் தான் இந்த கருவியை தயாரித்து வழங்கியது. இதனால் நிலவின் தென்துருவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது எனலாம். அதாவது நிலவின் தென்துருவத்தை ஆராய பல நாடுகள் அஞ்சி நடுங்கி ஒதுங்கி இருக்கும் நிலையில் இஸ்ரோ இந்த ரிஸ்க்கை எடுத்து சாதித்துள்ளது. மேலும் நிலவில் மனிதர்களால் வாழ முடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது தான் பல நாடுகளின் முதன்மையான நோக்கமாக உள்ளது.

இத்தகைய சூழலில் தான் நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை சந்திரயான் - 3 பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது. ஆக்சிஜன் தான் மனிதன் உயிர்வாழ தேவையான வாயுவாகும். இதனால் ரோவர் ஆய்வில் வெளிப்பட்ட இந்த தகவல் இந்தியாவை விண்வெளி துறையில் உயர்த்தி உள்ளது. அதோடு சல்பர், அலுமினியம், மெக்னீசியம், குரோமியம், டைட்டானியம், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்களும் மக்கள் பயன்பாட்டுக்கு அதிகம் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. இதனால் உலக நாடுகள் வியந்துபோய் இந்தியாவை திரும்பி பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.











இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...