Thursday, June 20, 2024

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?


பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வைத்திருப்பவனே வகுப்பறையில் மகாராஜா. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்ல் இருந்து பலரை பெரிய விஞ்ஞானிகள் ஆக்கிய பெருமை இந்த காந்தத்திற்கு உண்டு. நம்முடைய குழந்தைப் பருவத்து ஆவலின் பிரம்மாண்ட சகாவான இந்த காந்தம் வருங்கால கணினி உலகை முற்றிலும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வரப்போகிறது என்றால் நம்புவீர்களா?

குவாண்டம் காந்த கணினிகள் (Quantum magnetic computers) - https://bookday.in/

மாறக்கூடிய காந்தப்புலம் என்கிற ஒன்றை வைத்துக்கொண்டு தகவல் சேமிப்பை துரிதப்படுத்த இப்பொழுது அல்ட்ரா கோல்ட் (Ultra Cold) வெப்பநிலையில் சாத்தியம் ஆகும் என்பதை இயற்பியல் பேராசிரியர் அலெக்சாந்தர் பல்லாஸ்கி நிரூபித்திருக்கிறார். இவர் நோர்டிக் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் தி ரட்டிகள் ஃபிசிக்ஸ் என்கின்ற மிக முக்கிய நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆவார். இதனால் நமக்கு என்ன பயன்? நான் உண்மையிலேயே இதை வாசித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அறை வெப்பநிலையில் காந்தமற்ற ஒரு பொருளை காந்தத்தன்மை ஏற வைக்கின்ற புதிய அணுகுமுறை பல நூற்றாண்டுகளாக முயற்சி செய்யப்படும் ஒரு விஷயம். சமீபத்தில் இந்த விஷயம் சூடுபிடித்திருக்கிறது. இது குவாண்டம் பண்புகளை தூண்டுவதன் மூலம் செய்யப்படுவதால் அதிவேக கணினிக்கு வழி வகுக்கப்போகிறது என்பது தான் தற்போதைய செய்தி.

குவாண்டம் காந்த கணினிகள் (Quantum magnetic computers) - https://bookday.in/

2017 ஆம் ஆண்டில் பாலாஸ்கி மற்றும் அவருடைய சகாக்கள் ஒரு குவாண்டம் நிலையை உருவாக்குவதற்கான தத்துவார்த்த அணுகுமுறையை வகுத்தனர். இது டைனமிக் மல்டிஸ்ட்ராசிட்டி என்று அழைக்கப்பட்டது. இதனை வாசித்த பொழுது அது தொடர்பான பலசந்தேகங்கள் எனக்கு முளைத்தன. 2018 இல் இது குறித்த ஒரு புத்தகம் வெளிவந்தது. அதில் மின்துருவ முனைப்பு, காந்தம் அல்லாத பொருளில் காந்தத்தை தூண்ட முடியும் என்று எழுதப்பட்டிருந்தது.

டைட்டானியம் அணுக்களை ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும் வகையில் ஒரு பொருளில் கிளறி விடுவதை இந்த செயல்முறை உள்ளடக்கியது. சென்ற ஆண்டு நேச்சர் இதழில் ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் ஆர்தர்பலஸ்கின் குழு ஸ்டோன்யம் டைட்டன்த்தால் சூழப்பட்ட டைட்டானியம் அணுக்களின் கோட்பாட்டை நிரூபித்திருக்கிறது. இது அற்புதமான புதிய செய்தியாகும். இதன் மூலம் காந்தப்புல கணினிகள் சாத்தியமாகும்.

டைட்டானியம் மற்றும் இதில் இருந்து உருவாக்கப்பட்ட ஆக்சைடு இந்த குழு லேசர் தன்மைகளை அணுகியது. அது வட்டமாக தூவப்பட்ட போட்டான்ங்கள் அல்லது ஒளித்துகள்களை அலைநீளங்களில் குறுகிய குழுவில் உருவாக்கியது. ஆராய்ச்சியாளர்கள் 1300 நேனோமீட்டர் அலை நீல அகச்சிவப்பு லேசர் ஐ ஒரு நொடியில் ட்ரில்லியன் என்கின்ற 800 மைக்ரோளின் வெடிப்புகளில் உள்ள பொருட்களின் மீது செலுத்தினர்.

Laser cutting machine - https://bookday.in/

ஒப்பீட்டளவில் முடி அகற்றலில் பயன்படுத்தப்படுகின்ற லேசர்கள் 40 சூழல்கள் அல்லது 4,00,000 மைக்ரோஜூங்கள் வரை வெப்பநிலையை தாங்க முடியும். சுமார் 0.5 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்டமான கற்றை உருவாக்கப்பட்டு இதன் மூலம் காந்தப்புலங்கள் தூண்டப்பட்டன. இந்ததுடிப்புகள் பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தை தூண்டின. இவை எதிர் கடிகார சுழற்சி மூலம் நமக்கு தேவையான குளிர்சாதன காந்தத்தை போல வலுவான காந்தப்புலங்களை உருவாக்குகின்றன. இவற்றை இயக்கவும் தேவைப்பட்டால் அணைத்து வைக்கவும் முடியும். அணுக்கள் அசைக்கப்படும்போது தான் காந்தப்புலம் உருவானது.

எனவே காந்த கணினிகள் சாத்தியமாகின்றன. ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் நாவல்களில் இடம் பெற்ற ஒரு கண்டுபிடிப்பு தற்போது நேரடியான பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் அதிவேக கணினி என்பது ஏறக்குறைய மனித மனங்களின் வேகத்தில் செயல்படக்கூடியதாக மாறப்போகிறது. டெலிபத்தி என்பது? வெறும் கதை வடிவமல்ல. நாம் என்ன ஓட்டங்களை? ஒரு கருவி புரிந்துகொண்டு அந்த எண்ண ஓட்டங்களின் வேகத்திலேயே நமக்கு தட்டச்சு செய்தும் நமக்கான தகவல்களை பரிமாறியும் அதிவேகமான பாய்ச்சலை அறிவியலுக்கு வழங்க இருக்கிறது.

கார்ல் சாகனின் காண்டேக்ட் (Contact  Novel by Carl Sagan) - https://bookday.in/

கார்ல் சாகனின் காண்டேக்ட் (Contact  Novel by Carl Sagan) நாவலில் மிக அற்புதமான ஒரு விஷயம் வரும் வெப்பமுடுக்கவியலின் இரண்டாவது வீதி பின்னோக்கி ஓடும். இதே மாதிரி விஷயத்தைப் பற்றி கிரிகரி, பெட்ஃபோர்ட் எனும் வானியல் இயற்பியலாளர் பிளே இன்சைட் என்று ஒரு கதை எழுதினார். அதில் ஒருவருடைய மனதில் தோன்றுகின்ற அதுவரையில் மனிதகுலம் சிந்திக்காத புதிய விஷயங்கள் ஏதாவது இருந்தால் பிளேன்சைட் என்கின்ற அந்த ப்ராஜெக்ட் உடனடியாக கணினியாக்கம் செய்து உலகிற்கு அறிவித்துவிடும். பல சோம்பி நாவல்களில் வருவதை போல அரைமனிதன், அரைமிருகம் என்கின்ற இடத்தில் இருக்கும் பிசாசுகள் காந்த கணினிகள் உருவாக்கி.. என்னவெல்லாம் சந்திக்கின்றன என்பதை டேவிட்பிரீன் எழுதிய த ப்ராக்டிஸ் எஃபெக்ட் நாவல் படித்திருக்கிறேன்.

கணினிகள்  பெரும்பாலும் இலக்கியம், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்களின் கற்பனை பொருளாக 1940 முதல் வலம் வந்திருக்கின்றன. அப்படி பார்க்கின்றபொழுது ஜோனாதன் ஷிஃப்ட் எழுதிய களிவர் டிராவல்ஸ்… என்ஜின் என்கிற ஒரு கணினி 1726 அறிமுகமாகிவிட்டது. நீங்கள். இயந்திர நகரம் படித்திருக்கிறீர்களா? ஜான் டபிள்யூ கேம்பல் எழுதியது. அதில் டூலைட் என்கின்ற ஒரு கணினி வரும். 1954 எழுதப்பட்ட இந்த கணினி முழுக்க முழுக்க காந்தங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும் என்று அந்த நாவல் உங்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கும்.
ஐசக் அசிமாவ் (Isaac Asimov) - https://bookday.in/

அதேபோல ஐசக் அசிமாவ் (Isaac Asimov) பிரைம் ரேடியன்ட் என்று ஒரு கதை எழுதினார். அதில் உலகத்தின் ஒரு கணினி உருவாக்கப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் அது பதில் சொல்லிக்கொண்டிருக்கும். ஆர்தர்சி கிளாக் தனது ஒன்பது பில்லியன் பெயர்கள் கதையில் திபத்தி. லாமாசரியில் உள்ள துறவிகள் கடவுளின் அனைத்து சாத்தியமான பெயர்களையும் குறியாக்கம் செய்யும் ஒரு காந்தப் புல கணினியை வடிவமைத்து. மார்க் V என்று பெயரிட்டு இருப்பார். இப்படி காந்தகணினி பல வகையில் ஏற்கனவே நம்முடைய கதைவெளிக்கு வந்துவிட்டது.

 

 

 Elon Musk - https://bookday.in/

 

தற்போது நிஜத்திலேயே அப்படியான காந்த கணினிகள் வரப்போகின்றன. நம்முடைய வழக்கமான தட்டச்சு. வடிவத்தை காந்த ஸ்விச்ங்களாக மாற்றப்போகிறார்கள்.. CHAT GPT வந்தபொழுது ஒரு அன்பர். மனிதனின் வேலையை எல்லாம் அது செய்யப்போகிறது என்றால் எனக்கு பதிலாக ரேஷனில் வரிசையாக நின்று அதனால் சர்க்கரை வாங்க முடியுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அது மாதிரி இந்த காந்த கணினிகள் காதலுக்கு உதவுமா? என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது..

 

எழுதியவர்

 

ஆயிஷா இரா. நடராசன் நேர்காணல்: கல்வித் துறை சார்ந்த எழுத்து, வாசிப்பு இயக்கம் தேவை! | Ayesha Ira. Natarajan Interview - hindutamil.in

ஆயிஷா இரா. நடராசன்.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...