வரும் சுதந்திர தினத்தில் இஸ்ரோவின் விண்வெளி நோக்கிய பயணம்.
விண்வெளி துறையில் இந்தியா சமீப காலமாக பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக சந்திராயன் 3 மற்றும் ஆதித்யா எல்1 உள்ளிட்ட ஸ்பேஸ் மிஷன்கள் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று இஸ்ரோ இஒஎஸ்-8 செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் செலுத்துகிறது
செயற்கைகோள்கள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகள் நாட்டின் பல்வேறு துறைகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஏடிஎம், தொலைபேசி தொடர்பு, தொலைநிலை கல்வி, தொலைநிலை மருத்துவம், காலநிலை, வறட்சி மதிப்பீடு, நிலத்தடி நீர் பகுதிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளில் உதவுகிறது. மேலும், இஸ்ரோ மேற்கண்ட துறைகளை மேம்படுத்தும் வகையில் தேவைகளுக்கேற்ப பல்வேறு செயற்கைக் கோள்களை இஸ்ரோ தொடர்ந்து அனுப்பி வருகிறது.
புவி அறிவியல், நீர் மேலாண்மை, காலநிலை முன்னறிவிப்பு, ஊரக வளர்ச்சி, மீன்வளம் மற்றும் வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகளில் செயற்கைக்கோள் பயன்பாடு அதிகமாக உள்ளது.
மறுபுறம் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து முதலீடு செய்து அதிக அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகளில் பெரிதும் பாராட்டப்பட்ட மிஷன்தான் சந்திராயன் 3. விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. அப்படி இருக்கையில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை தொடங்கியது. அதுவரை இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக பார்த்த உலகம், இந்த வெற்றிக்கு பின்னர் அதன் பார்வையை மாற்றிக்கொண்டது.
ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.
இதனை தொடர்ந்து சுதந்திர தினத்தன்று, இஒஎஸ்-8 செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த இருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், ஓஎஸ்-8 செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம், மைக்ரோ சாட்டிலைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்டிலைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை அடங்கும்.
இஓஎஸ்-8 செயற்கைக்கோள் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (இஒஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (ஜிஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய மூன்று பேலோடுகளைக் கொண்டுள்ளது. இஒஐஆர் கருவி, செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த கருவியின் செயல்பாடாகும்” என்று கூறியுள்ளனர்.
ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும் எஸ் எஸ் எல் வி 3 காணவிரும்புவோர் பூர்த்தி செய்ய இணைப்பு
Link: https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp
நன்றி: முனைவர் முத்துசாமி, திருநெல்வேலி ஆஸ்ரோ கிளப் செயலர்.
இது போன்ற தகவல் பெற