Sunday, October 6, 2024

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?



இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Research Organisation, Human Space Flight Centre (HSFC) துறையில் மருத்துவ அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் , ட்ராஃப்ட்மேன் உள்ளிட்ட 103 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், எம்இ, எம் டெக், பிஎஸ்சி படித்த பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தற்போது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சந்திரன் வெற்றிக்குப் பிறகு மங்கள்யான், ககன்யான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்த இருக்கிறது.

விண்வெளி துறையில் பணியாற்ற ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மற்ற படிப்புகளை படித்த இளைஞர்கள் இஸ்ரோவில் சேர வேண்டும் என்ற கனவோடு வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்தும், எம் டெக், பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் பட்டம் பெற்றவர்களும் இஸ்ரோவில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ பணியாளர், விஞ்ஞானி, விஞ்ஞான உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 103 காலி பணியிடங்களை நிரப்புக தற்போது இஸ்ரோ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

காலி பணியிட விபரம்: 

3 மருத்துவ அதிகாரிகள், 10 விஞ்ஞானி பொறியாளர், 28 தொழில்நுட்ப உதவியாளர்கள், ஒரு விஞ்ஞான உதவியாளர், 43 டெக்னீசியன்கள், 13 வரைவாளர் (ட்ராஃப்ட்மேன்), ஐந்து உதவியாளர்கள் என மொத்தம் 103 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஊதிய விபரம்: 

உதவியாளர்களுக்கு 21 ஆயிரத்து 700 ரூபாய் முதல், விஞ்ஞானி, பொறியாளர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட உயர்நிலை பணியிடங்களுக்கு 2,08,700 வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி விபரம்: 

மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன், இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விஞ்ஞானி பொறியாளர், தொழிற்ப உதவியாளர் பணியிடங்களுக்கு எம்இ, எம் டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். டெக்னீசியன் பணியிடங்களுக்கு பிஎஸ்சி படித்தவர்களும். உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ட்ராப்ட்மேன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐடிஐ படிப்பில் சான்றிதழ் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரங்கள்: 

மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி பிரிவு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். விஞ்ஞான பொறியாளர் பணிக்கு 18 முதல் 30 ஆண்டுகளும், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 18 முதல் 35 வயது வரையும், அறிவியல் உதவியாளர் பணிக்கு 18 முதல் 35 வயது வரையும், டெக்னீசியன் (பி) பிரிவுக்கு 18 முதல் 35 ஆண்டுகளும், ட்ராஃப்ட்மேன் பணிக்கு 18 முதல் 35 வயது வரையும், உதவியாளருக்கு 18 வயது முதல் 28 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு: 

எஸ் சி மற்றும் எஸ் டி வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக கூடுதலாக 5 வயது வரை விண்ணப்பிக்கலாம், ஓபி சி விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் வரையும் அந்தந்த பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து விலக்கு பெறலாம்..

தேர்வு எப்படி நடக்கும் முறை: 

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு அவர்களுக்கு அழைப்பானை அனுப்பப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது: 

விண்ணப்பதாரர்கள் https://www.hsfc.gov.in/ என்ற இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...