Friday, March 28, 2025

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025.


சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும்போது நிகழ்கின்றது. சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. ஆனால் சூரியன் சந்திரனை விட பூமியிலிருந்து 400 மடங்கு தொலைவில் இருப்பதால் சந்திரனின் கோண விட்டமும் சூரியனின் கோண விட்டமும் பூமியிலிருந்து பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரே அளவாக தெரிகிறது(அரை டிகிரி). எனவே எப்போதெல்லாம் சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் வருகிறதோ அப்பொதெல்லாம் சூரிய கிரகணம் ஏற்படும்.

இந்த நிகழ்வில் சந்திரன் சூரியனை மறைப்பதால் பூமியின் சில பகுதிகளில் சூரிய ஒளியின் பொலிவு குறையும். அந்தப்பகுதிதான் சூரிய கிரகணம் நடக்கும் பகுதி ஆகும்.

சூரிய கிரகணத்தின் வகைகள்:

1.            முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse):

சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும்போது இது நிகழும். முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற அடுக்கை (Corona) அறிவியல் அறிஞர்கள் நிறமாலைமானி மூலம் ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.



2.            பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse):

சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வராமல் சற்று விலகி சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும்.



3.            வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse):

சில நேரங்களில் சந்திரன் சூரியனை மறைக்கும் போது சந்திரனின் கோண விட்டமானது சூரியனின் கோண விட்டத்தை விட கொஞ்சம் குறைவாக இருப்பதால் சூரியன் வளையம் போன்ற வடிவில் தெரியும். 


2025 ஆம் ஆண்டு சூரிய கிரகணம்:

மார்ச் 29, 2025 அன்று, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். இருப்பினும், இந்த அரிய வான நிகழ்வு அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக இந்தியாவில் இருந்து தெரியாது. சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் பகுதி சூரிய கிரகணம் ஆகும்.

சூரிய கிரகணத்தின் போது கண் பாதுகாப்பு மிக முக்கியமானது. இது பகுதி கிரகணமாக இருந்தாலும், சூரியனை நேரடியாகப் பார்ப்பது கண்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்?

 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

ISO-சான்றளிக்கப்பட்ட சூரிய தடுப்பு(எக்லிப்ஸ்) கண்ணாடிகள்:

இந்த சிறப்பு கண்ணாடிகள், சூரியனைப் பார்ப்பதற்கான கடுமையான பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான சூரியக்கண்ணாடிகள் போதுமான பாதுகாப்பை வழங்காது.

 பின்ஹோல் ப்ரொஜெக்டர்:

 இந்த எளிய பயனுள்ள முறையின் மூலம் சூரியனின் பிம்பத்தை ஒரு திரையில் காண்பிக்க உதவுகிறது. இது நேரடி சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கிறது.



தொலைநோக்கிகள்:
இந்த சாதனங்களுடன் எப்போதும் சூரிய வடிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு இல்லாமல் அவற்றின் மூலம் சூரியனைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தும்.

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் பூமியின் அழகிய வானியல் நிகழ்வுகள் மட்டுமின்றி அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை சந்திரன் அல்லது பூமியின் நிழல்கள் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கை நிகழ்வுகள். இவற்றால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!!





இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம்.

இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, பள்ளி கல்லூரி மாணவர்க...