2025ல் நிகழும் முழு சந்திர கிரகணத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி.
கொடைக்கானல் மற்றும் காவலூர் வான் ஆய்வகங்களில் இரு நாள் சிறப்பு நிகழ்ச்சி
செப்டம்பர் 7, 2025 அன்று, இந்தியா முழுவதும் காணக்கூடிய ஒரு அரிய முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. மக்கள் வெறும் கண்களால் இதை நேரடியாகப் பார்வையிடக்கூடிய வகையில் உருவாகும் இந்த கிரகண நிகழ்வை, கல்வி மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நோக்கில் மக்களிடையே பரப்பும் நோக்கில், "பயிற்றுவிப்பர்களுக்கான பயிற்சி" நிகழ்ச்சி ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்திலும், அதே தேதிகளில் காவலூர் வைணுபாபு வான் ஆய்வகத்திலும் நடைபெற்றது.
இந்த இரு நாள் நிகழ்ச்சிகளில்,
* சந்திர கிரகணத்தின் அறிவியல் அம்சங்களை விளக்கும் விரிவான உரைகள்,கலந்துரையாடல்கள்,
தொலைநோக்கி அமைப்பும் செயல்விளக்கம்,
மாணவர்களுக்கான அறிவியல் விளக்கக் கண்காட்சிகள்
மற்றும் பல அனுபவ செயல்பாடுகள் இடம்பெற்றன.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 70 வான் இயல் ஆர்வலர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று, எதிர்கால சந்திர கிரகண விழிப்புணர்வு பணிக்கான திட்டங்களை உருவாக்கினர். குழு விவாதங்கள், செயல் திட்டங்கள் மற்றும் புதிய நோக்குகள் ஆகியவையும் இந்த பயிற்சியின் முக்கிய அங்கங்களாக இருந்தன.
இந்தப் பயிற்சியை இந்திய வானியற்பியல் மையத்தின் அறிவியலாளர்கள், திட்ட இயக்குநர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஒழுங்கமைத்து, திறமையாக வழிநடத்தினர்.
உலகை உற்று நோக்கவைக்கும் இந்த சந்திர கிரகணத்தை, மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வுடன் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
முனைவர் P. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க
No comments:
Post a Comment