Saturday, August 2, 2025

யூத் அஸ்ட்ரானமி அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் (YASSC-2025)

யூத் அஸ்ட்ரானமி அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் (YASSC-2025)


தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனம், கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மாநில கவுன்சில், அறிவியல் பலகை, திருச்சி பிஷப் கல்லூரி ராமன் ரிசர்ச் ஃபவுண்டேஷன்  பவுண்டேஷன் மற்றும் திருச்சி அஸ்ட்ரோகிளப் இணைந்து நடத்திய  யூத் அஸ்ட்ரானமி அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் (YASSC-2025) ன் திருச்சி மண்டல மாநாடு பிஷப் ஹீபர் கல்லூரியில் வெள்ளி (01/08/2025) அன்று நடைபெற்றது.


மாநாட்டின் துவக்க விழாவிற்கு YASSC  திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை தாங்கினார்.

 திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் உமா வரவேற்றார். பிஷப் ஹீபர் கல்லூரி அறிவியல் புல தலைவர் டாக்டர்.வயலட் தயாபரன் தொடக்க உரையாற்றினார். பங்கேற்பாளர்களுக்கான விதிமுறைகளை விளக்கி YASSC - 2025 மாநில  ஒருங்கிணைப்பாளர் ஜோசப்பின் பிரபா உரையாற்றினார். முடிவில் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் தலைவர் ஜெயபால் நன்றி கூறினார். 

இந்த மாநாட்டில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


 மாணவர்கள் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தல் (paper presentation) , டிஜிட்டல் முறையில் தகவல்கள் அளித்தல் ( E - content development ), வானவியல் விளையாட்டு உருவாக்குதல்( Astro Games),சுவரொட்டி விளக்கக் காட்சி ( poster presentation) உள்பட ஆறு தலைப்புகளில் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்தனர். 

7 கல்லூரியில் சேர்ந்த 25 பேராசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர். 

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்டு சயின்ஸ் சொசைட்டியின்   மாநில பொதுச் செயலாளர் மனோகர்,

ராமன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் டாக்டர் ரவிச்சந்திரன், வே டூ சக்ஸஸ் நிறுவனர் சின்னப்பன், திருச்சி ராக்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்த்கார்த்திக், திருச்சி பிளஸ் சிவக்குமார், சாவித்திரி, YASSC மாநில  ஒருங்கிணைப்பாளர் ஜோசப்பின் பிரபா ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கினர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சாந்தி, உமா, பிரகாஷ், மோசஸ், ரமேஷ், பால சரவணன், ஜெயபால், அமிர்த ஜெயபால், ஆண்டி ராஜ் மகேஸ்வரன், ஸ்டேனீஸ் ரத்தினம், திலகவதி உள்ளிட்ட ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 15, 16, 17-ந்தேதிகளில்  சிவகாசியில் உள்ள காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற உள்ளது.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

  • இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...