Tuesday, February 2, 2021

Today (February 2, 1907) is Dmitry Mendeleev's Memorial Day, the creation of the first periodic table based on the atomic weights of the elements.

Today (February 2, 1907) is Dmitry Mendeleev's Memorial Day, the creation of the first periodic table based on the atomic weights of the elements.

 

Dimitri Mendeleev was born on February 8, 1834, in Tobolsk, Siberia, Russia, the 17th last son of Ivan Pavlovich Mendeleev and Maria Dimitrievna Mendeleev. His father died when he was 13 years old. Mother's factory was destroyed by fire. Mendeleev's family moved to St. Petersburg in 1849. There he joined the Dmitry Teacher Training College in 1850 and graduated. Mendeleev contracted tuberculosis in 1855 and had to move to Crimea in the Black Sea. After a full recovery, he returned to St. Petersburg in 1857. Between 1859 and 1861 he was involved in chemical research in Heidelberg, Germany. In 1861 he wrote and published a book on spectroscopy. The book was awarded the Demidov Prize by the Petersburg Academy of Sciences. This earned him great fame.

 

In 1862 Mendeleev became a professor of chemistry at St. Petersburg Government Technical College. In 1863 he became a professor at St. Petersburg State University. He received his doctorate in 1865 for his study of the combination of alcohol with water. In 1863 56 elements were known. At that time the elements were discovered at a rate of about one per year. Other scientists previously knew the definitions of molecules and the periodic properties of elements. In 1864, John Newlands described the hexadecimal law, considering the similarity that occurs when comparing eight elements into atomic weights. It was published in 1865 as Newland's Eighth Law. Based on this new elements such as germanium were identified. Until 1887 his discoveries were criticized without being approved by the Chemical Society.

 

In 1864 Lothar Meyer proposed a concept of the periodic properties of elements based on the parallel properties of 28 elements. But there are no predictions about new elements in it. Mendeleev later became a teacher and wrote a two-volume book, The Philosophy of Chemistry (1868-1870), for students. He made it into a textbook for his curriculum. This book was written when he made his most important discovery. When he tried to classify elements based on chemical properties, the concept of the periodic table emerged, which predicted periodic properties. When he got a lot of information about the atom, he prepared an elementary table for himself. He said he had dreamed of that table with all the elements.

 Happy Birthday Dmitri Ivanovich Mendeleev - GIF on Imgur

"In my dream, I saw a table where all the elements were in their proper place. I immediately got up and wrote it down on a piece of paper. Unaware of previous work on periodic table preparation in the 1860s, he prepared the table. The longitudinal periodic table was formed when other elements were added in this manner. On March 6, 1869, Mendeleev submitted his table to the Russian Institute of Chemistry entitled "The properties of elements depend on their atomic weights". In it, he described both atomic weight and covalence as elements that explain the properties of elements. He completed the table by anticipating the properties of many undiscovered elements in the table at the time. A few months after Mendeleev unveiled the table, Julius Meyer of Germany announced a similar table.

 No, this is a periodic table - GIF on Imgur

If the elements are arranged in ascending order according to their atomic weights, their properties will be revealed to be periodic. Elements with similar chemical properties may have the same atomic weights (eg platinum, iridium, osmium) or their atomic weights may be in sequence (eg potassium, rubidium, cesium). The parallelism of the elements in a series in the order of atomic weight varies according to their atomic weights. Similarly, to a significant extent, they are similar to their unique chemical properties. It is found in lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen and fluorine. Elements with low atomic weights are highly permeable. Atomic weight determines the properties of elements, just as molecules determine the nature of a substance. We should expect the discovery of many unknown elements (example: two elements: similar to aluminium and silicon with their atomic weights ranging from 60 to 75).

 

The atomic weights of the elements can sometimes be corrected by the knowledge of the elements next to them. The atomic weight of tellurium should be between 123 and 126, not 128. (The atomic mass of tellurium is 127.6, and Mendeleev in a series assumed that the atomic weight should increase steadily). Some characteristic properties of elements can be predicted by their atomic masses. Dmitry Mendeleev published a periodic table of all known elements in a Russian language scientific journal. He predicted many new elements that could complete the table. A few months later, Meyer published a similar table in the German Journal of Linguistics. Some consider Meyer and Mendeleev to be co-creators of the periodic table. According to Mendeleev's table, based on the properties of germanium, gallium and scandium, he accurately predicted the properties of the undiscovered elements eco styling, aluminium and ecoperone.

 Sign in | Periodic table chart, Periodic table, Period

He used the nicknames Eka, tie, and tri (one, two, three in Sanskrit) for naming the eight elements that appeared in his calculation. Mendeleev raised questions about some of the atomic weights of the elements accepted in his time. (Atomic weights could only be measured with low accuracy at the time). He pointed out that they did not correspond to the periodic rule recommended by his timeline. He noted that tellurium has a higher atomic weight than iodine. And he put them in the right order. The atomic weights accepted at the time were predicted to be wrong. He was confused about where to place the known Langhans. And predicted that atomic mass actinides would be in another order in the same table. Some rejected Mendeleev's predictions that there were more elements. But in 1875 and 1886 he proved that Ga (gallium) and Ge (germanium) matched the properties specified in the blanks, respectively.

 

By giving Sanskrit names to elements on the list of "undiscovered elements" according to his policy, Mendeleev expressed his admiration and gratitude to the Sanskrit grammarians of ancient India. His work was a way of thanking grammar scholars for inventing two-dimensional forms of basic sounds, the most advanced principles of language. Mendeleev was a friend of the Sanskrit Böhtlingk. At the time, Poutling was preparing the second edition of his book, Pāṇini. Mendeleev wanted to honour Bowling by incorporating these into the nomenclature for the elements.

 Dynamic periodic table of the elements in Excel. Clever! | Periodic table  of the elements, Periodic table, Elementary chemistry

When elements were at odds by atomic weight, Mendeleev gave priority to homogeneity. (Example: In terms of atomic weight, although similar to the elements nitrogen and phosphorus, the element magnesium is placed in the beryllium family based on its properties). Their periodic characteristic discoveries at both levels were later explained by the theory of internal structure. The original draft, invented and developed by Mendeleev, will be published many years later as a book entitled "Temporary Structure of Elements". Dmitry Mendeleev is referred to as the father of the column table. He refers to the instrumentation or table of information in his columns and columns as the periodic system. It is a remarkable achievement that Mendeleev defined the properties of elements not discovered in his time. Dmitry Mendeleev, who developed the first periodic table based on the atomic weights of elements, passed away on February 2, 1907, at the age of 72 in St. Petersburg.

Source By: Wikipedia.

Information: Dr. P. Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.




தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய திமீத்ரி மெண்டெலீவ் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 2, 1907).

தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய திமீத்ரி மெண்டெலீவ் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 2, 1907). 

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev) பிப்ரவரி 8, 1834ல் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17ஆவது கடைசி மகவாகப் பிறந்தார். 13ஆவது வயதில் இவரது தந்தை காலமானார். தாயாரின் தொழிற்சாலை தீயில் எரிந்து அழிந்தது. வறுமையில் வாடிய மென்டெலீவின் குடும்பம் 1849 ஆம் ஆண்டில் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 1850ம் ஆண்டில் திமீத்ரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். அப்போது மெண்டெலீவுக்கு காசநோய் பீடித்ததால் 1855ல் கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியாவுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. முற்றாக நோய் குணமானதும் மீண்டும் 1857ல் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார். 1859க்கும் 1861க்கும் இடையில் இவர் ஜெர்மனியின் ஹைடெல்பூர்க் நகரில் வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1861ல் நிறமாலைமானி (spectroscope) பற்றிய ஒரு நூலை எழுதி வெளியிட்டர். இந்த நூல் இவருக்கு பீட்டர்ஸ்பர்க் அறிவியல் அகாடமியின் டெமிடோவ் (Demidov) பரிசைப் பெற்றுத்தந்தது. இது அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. 

1862ல் மெண்டெலீவ் சென் பீட்டர்ஸ்பேர்க் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியரானார். 1863ல் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 1865ல் நீருடன் ஆல்கஹால் சேர்க்கை குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். 1863 ஆம் ஆண்டில் 56 தனிமங்கள் அறியப்பட்டிருந்தன. அக்காலத்தில் ஏறத்தாழ ஆண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற விஞ்ஞானிகள் முன்பு மூலக்க்கூறுகள் பற்றிய வரையறைகளையும், தனிமங்களின் ஆவர்த்தன பண்புகள் பற்றியும் அறிந்திருந்தனர். 1864ல் ஜான் நியூலாண்ட்ஸ் (John Newlands) என்பவர் அணு எடைகளின் அடிப்படையில் எட்டு தனிமங்களாக தொகுக்கும்போது ஏற்படும் பண்பொற்றுமையைக் கருத்தில் கொண்டு எண்ம விதியை விவரித்தார். இதனை 1865ல் நியூலாண்டின் எண்ம விதி என்ற பெயரில் வெளியிட்டார். இதன் அடிப்படையில் ஜெர்மானியம் போன்ற புதிய தனிமங்கள் அடையாளம் காணப்பட்டன. 1887 வரை அவரது கண்டுபிடிப்புகள் வேதியியல் சங்கத்தால் அங்கீகரிக்கப்படாமல் விமர்சிக்கப்பட்டு வந்தன. 

1864 ஆம் ஆண்டு லொத்தர் மேயர் (Lothar Meyer) என்பவர், 28 தனிமங்களின் இணைதிறன்களை அடிப்படையாகக் கொண்டு தனிமங்களின் ஆவர்த்தன பண்புகள் பற்றிய ஒரு கருத்துத்தாளை முன்மொழிந்தார். ஆனால் அதில் புதிய தனிமங்கள் பற்றிய கணிப்புகள் எதுவும் இல்லை. மென்டெலீவ் ஆசிரியரான பின்னர் மாணவர்களுக்காக இரண்டு பகுப்புகள் உடைய 'வேதியியலின் தத்துவங்கள்' (1868-1870) என்ற நூலை எழுதினார். அதனை அவர் தனது பாடத்திட்டத்திற்கான ஒரு பாடநூலாக்கிக்கொண்டார். இந்நூல் இவர் தன்னுடைய மிக முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்த போது எழுதப்பட்டதாகும். இவர் வேதியியல் குணங்களின் அடிப்படையில் தனிமங்களை வகைப்படுத்த முயன்றபோது, ஆவர்த்தனப் பண்புகளை முன்னிறுத்திய ஆவர்த்தன அட்டவணை எனும் கருத்து தோன்றியது. அணுத்திணிவு குறித்த பல தகவல்கள் கிடைத்தபோது அவர் தனக்கென ஒரு தனிம வரிசை அட்டவணையைத் தயாரித்தார். அனைத்து தனிமங்களுடன் கூடிய அந்த அட்டவணையை அவர் கனவில் முழுமையாகக் கண்டதாகக் கூறியிருந்தார்.

 Happy Birthday Dmitri Ivanovich Mendeleev - GIF on Imgur

"நான் கண்ட கனவில், எல்லா தனிமங்களும் அவற்றிற்கு உரிய தேவைப்படும் இடத்தில் இருக்கும் ஒரு அட்டவணையைப் பார்த்தேன். உடனடியாக எழுந்து, ஒரு காகிதத்தில் அதை எழுதினேன். அவசியம் என்று தோன்றிய ஒரே இடத்தில் ஒரு திருத்தம் செய்தேன்."-இன்ஸ்டான்ட்ஸேவ் என்பாரின் கூற்றுப்படி திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் கூறியவை. 1860களில் ஆவர்த்தன அட்டவணை தயாரிப்புக்கான முந்தைய வேலைகளைப் பற்றி அறியாமல், அட்டவணையை அவர் தயார் செய்தார். இந்த முறையில் வேறு தனிமங்களைச் சேர்த்தபோது நீள்வரிசை ஆவர்த்தன அட்டவணை உருவானது. மார்ச் 6, 1869ல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த அட்டவணையை 'தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எடைகளைச் சார்ந்திருக்கின்றன' என்ற தலைப்பில் சமர்ப்பித்தார். அணு எடை மற்றும் இணைதிறன் ஆகிய இரண்டும் தனிமங்களின் பண்புகளை விளக்கும் கூறுகள் என்றும் அதில் விவரித்திருந்தார். இந்த அட்டவணையில் அப்போது பல கண்டிபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளையும் எதிர்வு கூறி அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார். மென்டெலீவ் இவ்வட்டவணையை வெளிப்படுத்திய சில மாதங்களுக்குப் பின்னர் ஜெர்மனியின் ஜூலியஸ் மேயர் என்பவர் அதே மாதிரியான அட்டவணையை அறிவித்தார்.

 No, this is a periodic table - GIF on Imgur

தனிமங்கள், அவற்றின் அணு எடைகளின்படி எறுவரிசையில் அமைக்கப்படுமானால் அவற்றின் பண்புகள் ஆவர்த்தன அடிப்படையில் இருப்பது வெளிப்படும். ஒரே மாதிரியான வேதி குணங்களைக் கொண்ட தனிமங்கள், ஒரே மாதிரியான அணு நிறைகளைப் பெற்றிருக்கும் (உதாரணம்: பிளாட்டினம், இரிடியம், ஆஸ்மியம்) அல்லது அவற்றின் அணு எடைகள் எறுவரிசையில் அமைந்திருக்கும் (உதாரணம்: பொட்டாசியம், ருபீடியம், சீஸியம்). அணுவின் எடையின் வரிசையில் ஒரு தொடரில் உள்ள தனிமங்களின் இணைதிறன்கள் அவற்றின் அணு எடைகளைப்பொறுத்து மாறுபடும். அதேபோல், குறிப்பிடத்தக்க அளவிற்கு, அவற்றின் தனித்துவமான இரசாயன பண்புகளுடன் ஒத்திருக்கும். இதனை லித்தியம், பெரிலியம், போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் புளூரின் என்ற தொடரில் வெளிப்படையாகக் காணலாம். குறைந்த அணு எடைகள் கொண்ட தனிமங்கள், மிகவும் எளிதாகப் பரவக்கூடியவை. ஒரு பொருளின் தன்மையை மூலக்கூறுகள் தீர்மானிப்பது போல், அணு எடை தனிமங்களின், பண்புகளை நிர்ணயிக்கிறது. பல அறியப்படாத தனிமங்கள் கண்டுபிடிக்கப்படுவதை நாம் எதிர்பார்க்க வேண்டும் (உதாரணம்: இரு தனிமங்கள்: அலுமினியத்திற்கும் சிலிக்கானுக்கும் ஒப்பானவை அவற்றின் அணு நிறைகள் 60 முதல் 75 வரை இருக்கும்). 

தனிமங்களின் அணு எடைகள், சில நேரங்களில் அவற்றிற்கு அடுத்துள்ள தனிமங்கள் பற்றிய அறிவால் திருத்தப்படலாம். டெல்லுரியத்தின் அணு எடை 123 மற்றும் 126க்கு இடையில் இருக்க வேண்டும், 128 ஆக இருக்கக்கூடாது. (டெலூரியத்தின் அணு நிறை 127.6 ஆகும். மேலும் மெண்டலீவ் ஒரு தொடரில், அணு எடையானது சீராக அதிகரிக்க வேண்டும் என்று கருதினார்). தனிமங்களின் சில சிறப்பியல்பு பண்புகள் அவற்றின் அணு நிறைகளைக் கொண்டு முன்னறிவிக்கப்படலாம். திமீத்ரி மெண்டெலீவ் அறியப்பட்ட அனைத்து தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணையை ஒரு ரஷ்ய மொழி அறிவியல் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிட்டார். அட்டவணையை நிறைவு செய்யக்கூடிய பல புதிய தனிமங்களை முன்னறிவித்தார். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, மேயர் என்பார், ஏறத்தாழ இதே போன்ற அட்டவணையை ஜேர்மனிய மொழி அறிவியல் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிட்டார். சிலர் மேயர் மற்றும் மெண்டலீவ் ஆகியோரை ஆவர்த்தன அட்டவணையின் இணை-படைப்பாளர்களாக கருதுகின்றனர். மெண்டலீவ் தன் அட்டவணைப்படி, ஜெர்மானியம், கேலியம் மற்றும் ஸ்கந்தியம் ஆகியவற்றின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, எகாசிலிங்கன், எகாளுமைனியம் மற்றும் ஈகோபரோன் என்ற கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் குணங்களைத் துல்லியமாக கணித்துள்ளார்.

 Sign in | Periodic table chart, Periodic table, Period

அவரது கணிப்பில் தோன்றிய எட்டு தனிமங்களுக்கு, பெயரிடும்போது, எகா, டை, மற்றும் ட்ரை (சமஸ்கிருத மொழியில் ஒன்று, இரண்டு, மூன்று) எனும் மொன்னொட்டுகளைப் பயன்படுத்தினார். மெண்டலீவ் தன் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிமங்களின் அணு எடைகளில் சிலவற்றைப் பற்றி கேள்விகளை எழுப்பினார். (அந்தக் காலத்தில் குறைந்த அளவிலான துல்லியத்தோடு மட்டுமே அணு எடைகளை அளக்க முடிந்தது). அவரது கால வரையறையால் பரிந்துரைக்கப்பட்ட ஆவர்த்தன விதியை அவை ஒத்திருக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். டெலூரியம் அயோடைனை விட அதிக அணு எடையைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் அவற்றை சரியான வரிசையில் வைத்தார். அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணு எடைகள் தவறு என்று கணிக்கப்பட்டன. அறியப்பட்ட லந்தானைகளுக்கு எங்கே இடம் அளிப்பது என்பது பற்றி அவர் குழப்பமடைந்தார். மேலும் அணு நிறையில் மிகுந்த ஆக்டினைடுகள் இதே அட்டவணையில் மற்றொரு வரிசையில் இருப்பதைக் கணித்தார். மேலும் பல தனிமங்கள் இருப்பதாக மெண்டலீவ் கணித்தவற்றை சிலர் புறந்தள்ளினர். ஆனால் 1875 மற்றும் 1886 ஆம் ஆண்டுகளில் Ga (கேலியம்) மற்றும் Ge (ஜெர்மானியம்) ஆகியவை முறையே காலியாக விடப்பட்டிருந்த இடைவெளிகளில் குறிப்பிட்டிருந்த பண்புகளுடன் பொருந்தி இருந்ததை அவர் நிரூபித்தார். 

அவரது கொள்கைப்படி "கண்டுபிடிக்கப்படாத தனிமங்கள்" பட்டியலிலிருந்த தனிமங்களுக்கு சமஸ்கிருத பெயர்களை அளித்ததன் மூலம், மெண்டலீவ் பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத இலக்கண அறிஞர்களுக்குத் தனது பாராட்டுதல்களையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினார். அவரது இச்செயல், மொழியின் அதிநவீன கோட்பாடுகளான அடிப்படை ஒலிகளிலுள்ள இரு பரிமாண வடிவங்களை கண்டுபிடித்த இலக்கண அறிஞர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அமைந்தது. மெண்டலீவ் சமஸ்கிருதவாத பௌத்லிங்க் (Böhtlingk)கின் நண்பர் ஆவார். அந்த நேரத்தில் பௌத்லிங்க் தனது பானினி (Pāṇini) என்ற புத்தகத்தின் இரண்டாவது பதிப்பைத் தயாரித்துக்கொண்டிருந்தார். மெண்டலீவ் தனிமங்களுக்கான பெயரிடும் முறையில் இவற்றை புகுத்துவதின் மூலம் பௌத்லிங்க்கை கௌரவிக்க விரும்பினார்.

 Dynamic periodic table of the elements in Excel. Clever! | Periodic table  of the elements, Periodic table, Elementary chemistry

தனிமங்கள் அணு எடையால் முரண்பட்டபோது, மெண்டலீவைப் பொறுத்தவரையில் சமவுருவுடைமைக்கு முன்னுரிமை அளித்தார். (உதாரணம்: அணு எடை அடிப்படையில், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் தனிமங்களுடன் ஒத்திருந்தாலும், மெக்னீசியம் தனிமமானது அதன் பண்புகளின் அடிப்படையில் பெரிலியம் குடும்பத்தில் இடம் அமர்த்தப்பட்டுள்ளது). இரண்டு நிலைகளிலும் இவர்களின் ஆவர்த்தன பண்புக் கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில் உள் கட்டமைப்பு கோட்பாட்டால் விளக்கப்பட்டன. மெண்டலீவ் கண்டுபிடித்து உருவாக்கிய அசல் வரைவு பல ஆண்டுகளுக்கு பின்னர் "தனிமங்களின் தற்காலிக அமைப்புமுறை" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்படும். டிமிட்ரி மெண்டலீவ் தனிமவரிசை அட்டவணையின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார். இவர் தன்னுடைய வரிசைகளிலும் பத்திகளிலும் தகவல் தரும் கருவியமைப்பு அல்லது அட்டவணையை ஆவர்த்தன அமைப்பு என்று குறிப்பிடுகிறார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய திமீத்ரி மெண்டெலீவ் பிப்ரவரி 2, 1907ல் தனது 72வது அகவையில் புனித பீட்டர்ஸ் பேர்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia.

தகவல்: முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




Monday, February 1, 2021

✍🏻🪦🪦 இயற்கை வாழ்வியல் முறை🪦🪦கழற்சிக்காயின் பயன்கள்.

 ✍🏻🪦🪦 இயற்கை வாழ்வியல் முறை🪦🪦கழற்சிக்காயின் பயன்கள்.

🪦🪦🪦🪦🪦🪦

கழற்சிக்காயின் இலைகள், காம்புகள், விதைகள், வேர்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. 

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள் - Medicinal benefits oF kazharchikkay |  பெமினா தமிழ்

நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும். வயிற்று பிரச்சனைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலிருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள் - Medicinal benefits oF kazharchikkay |  பெமினா தமிழ்

🪦🪦🪦🪦🪦🪦

கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும். ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். 

🪦🪦🪦🪦🪦🪦

தொழுநோய் என்பது ஒரு வகை கிருமி உடலில் தொற்றிக்கொண்டு கை கால் விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் உடலின் இன்ன பிற பாகங்கள் போன்றவற்றை பாதித்து, அவற்றை அழுகி போகச்செய்யும் கொடுமையான வியாதியாகும். கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் கட்டுப்படும்.

Thagadur Yathirai – | Old Tamil Poetry

🪦🪦🪦🪦🪦🪦

யானைக்கால் வியாதி என்பது ஒரு வகை கொசு கடிப்பதால், அதனிடமிருந்து பரவும் கிருமி உடலில் தொற்றி கால்கள், நிண நீர் சுரப்பிகளையும் பாதிக்கிறது. கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.

🪦🪦🪦🪦🪦🪦

ஆண்களை பாடாய்ப்படுத்தும் விதை வீக்கம் பிரச்சனைக்கு இவை சிறந்த மருந்தாக இருக்கும். விரையில் அடிபட்டாலோ கட்டி வந்தாலோ விரையை சுற்றியிருக்கும் சவ்வுபையில் சுரக்கும் சுரப்பு நீர் அதிகமாக சுரந்து விரை வீக்கம் உண்டாகும்.

இவை நிணநீர் பாதையை அடைத்துகொள்வதால் விரைகள் வீக்கத்துக்கு உள்ளாகும். இதனால் விரைகள் மெல்ல பெரிதாகி கொண்டே போகும். இந்த கழற்சிக்காய் விதைகளை அரைத்து விரைகள் மீது பற்று போல் தடவி வந்தால் சுரப்பு நீர் பொறுமையாக வெளியேறி வீக்கம் வற்றிவிடும்.

🪦🪦🪦🪦🪦🪦

இந்த கழற்சிக்காய் சூரணத்தை விளக்கெண்ணெயோடு சேர்த்து காய்ச்சி தைலத்தை விதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் சுரப்பிகளின் வீக்கம் கட்டுக்குள் அடங்கும். விதைப்பை வலி குறையும்.

🪦🪦🪦🪦🪦🪦

விரைவாதம் குறைய கழற்சிக்காய் விதையை வாணலியில் போட்டு இலேசாக பச்சை வாடை போகும்படி வறுத்து பொடிக்கவும். இதை சிட்டிகை எடுத்து பாலில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் விரைவாதம் நீங்கும். முன்னோர்கள் விரை பிரச்சனைக்கு பயன்படுத்திய மருந்து இது.

🪦🪦🪦🪦🪦🪦

கழற்சிக்காய் இலையை பொடியாக்கி அதை கொண்டு பல் துலக்குவதன் மூலம் பல் வலி குறையும். பல் ஈறுகள் வலுப்பெற கழற்சிக்காய் இலையை கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய்கொப்புளித்தால் பலன் கிடைக்கும். வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் இந்த நீரை தொடர்ந்து வாய்கொப்புளித்து வந்தால் துர்நாற்றம் மறையும்.

🪦🪦🪦🪦🪦🪦

பல் சொத்தை ஆரம்பத்தில் இருந்தால் இந்த பொடியை கொண்டு அந்த இடத்தில் சில நொடி வைத்து தேய்த்துவந்தால் பல் சொத்தை மறையவும் செய்யும். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும். அதோடு கழற்சிக்காயை தீயில் சுட்டு சூரணமாக்கி கொட்டைபாக்கு, கரி சேர்த்து பல் தேய்த்து வந்தாலும் பல் ஈறு பிரச்சனை, பல் சொத்தை இரண்டுக்குமே பலன் கிடைக்கும்

🪦🪦🪦🪦🪦🪦

கட்டுரை ‌ஆ.வீ. இயற்கை மருத்துவர் முத்துப்பாண்டி.

Bonduc Nut facts and health benefits

🪦🪦🪦🪦🪦🪦

மிகினும் குறையினும் நோய்செய்யும்

அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

🪦🪦🪦🪦🪦🪦

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🪦🪦🪦🪦🪦🪦

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🪦🪦🪦🪦🪦🪦

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


பன்னாட்டு அளவிலான “கதிர் விருதுகளுக்கான போட்டிகள்”.

 பன்னாட்டு அளவிலான “கதிர் விருதுகளுக்கான போட்டிகள்”.


யாவரும் கேளீர் குழுவினர் சார்பாக வணக்கம்.

நமது குழு சார்பாக மாதந்தோறும் திறன் வளர் போட்டிகளும் கருத்தரங்களும் இணையவழியில் எவ்வித கட்டணமுமின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இம்மாதம், பன்னாட்டு அளவிலான “கதிர் விருதுகளுக்கான போட்டிகள்” நடைபெறவுள்ளன. மேலும் இத்துடன் விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதிகப்படியான பங்கேற்பாளர்களை கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு செய்வதற்கான இணைப்பு : https://forms.gle/vzuXxj93JG1uxHck6   

இந்த செய்தியை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு பகிர்ந்து அவர்களின் திறனை மேலும் மேம்படுத்த உறுதுணையாக இருக்கவும். மேலும் சந்தேகங்களுக்கு : 8680817341 & 9047821332.


விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன<--Click Link

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இணைய டேட்டா: முதல்வர் தொடக்கம்.

அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இணைய டேட்டா: முதல்வர் தொடக்கம்.

அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இணைய டேட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. தினந்தோறும் 2 ஜிபி டேட்டா என 3 மாதத்ததிற்கு அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அரசு முன்னரே அறிவித்திருந்தது. 


இது இணையவழி கல்வி பயில உதவியாக இருக்கும் என முதல்வர் கூறியிருந்தார். அதன் பேரில் இன்று டேட்டா அட்டை வழங்கு நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார். புதிய தலைமை செயலாளர் ராஜூவ் ரஞ்சனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இணைய வழி பாடங்கள் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகின்றன. 


இணைய வழியில் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் போதிய இணைய வசதிகள் இன்றி பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அதனை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக  2 ஜிபி இணைய டேட்டா வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


அதன்படி  இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு பிப்ரவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை 3 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி பி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா அட்டைகள்  வழங்கப்பட்டன.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17- EOS-05  செயற்கைகோள் வெற்றி.  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நி...