Saturday, February 25, 2023

பெரம்பலூர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.

பெரம்பலூர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.


தேசிய அறிவியல் நாள் (National Science Day) பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.



இந்த தேசிய அறிவியல் நாள் கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நிலா திருவிழா  பெரம்பலூர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  கொண்டாடப்பட்டது.

நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், செவ்வாய் கோள்,  ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் தேவநாதன், ஆனந்தராஜா,  மற்றும்  பாஸ்கரன்  மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர்.இந்த விழாவில் 500க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், 
இந்திய வானியல்  சங்கம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், நேரு நினைவுக் கல்லூரி, அறிவியல் பலகை, NMC ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து இந்த நிலா திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.


மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருந்தது.




Thursday, February 23, 2023

நேரு நினைவுக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின கருத்தரங்கம்.

நேரு நினைவுக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின கருத்தரங்கம்.


புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தமிழாய்வுத் துறை சார்பாக திருவள்ளுவர் தமிழ் மன்றம் நடத்தும் உலகத் தாய்மொழி தின கருத்தரங்கம் 23-02-2023 அன்று வியாழக்கிழமை காலை 10 மணி தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன், 
கல்லூரி செயலர் பொன். இரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்து தாய் மொழியின் பெருமைகளை எடுத்துக் கூறினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் அ.இரா.பொன் பெரியசாமி அவர்கள் தலைமையுரை யாற்றினார். தமிழாய்வுத் துறைப் பொறுப்பாளர் முனைவர் சி. பிரபாகரன் வரவேற்புரை நல்கினார் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம் அவர்கள் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடுவதன் அவசியத்தை எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கினார். 

காலை 10 மணிக்கு தொடங்கிய முதல் அமர்வில் பேசிய பிருந்தா (திருச்சி மாவட்ட செய்தியாளர் புதிய தலைமுறை தொலைக்காட்சி) அவர்கள்  ஊடகத்துறையில் தமிழ் மாணவர்கள் பணியாற்ற விரும்புபவர்கள் தன்னம்பிக்கை, தேடல், தமிழை இலக்கண பிழையின்றி பேச எழுதும் திறமை இருந்தால் ஊடகத்துறையில் நுழைவதற்கு ஏதுவாக அமையும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 


மேலும்  மதியம் 1 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அமர்வில் பேசிய முனைவர் மு .சேரன் (தொல்லியல் ஆராய்ச்சி நிபுணர்) 
ஆதித்தமிழன் பயன்படுத்திய பொருட்களின் சிறப்புகள், யவணர்கள் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியத்தில் தொல்லியல் சார் குறிப்புகள், பழந்தமிழர்களின் உணவு முறைகள் ,பழக்க வழக்கங்கள் குறித்து அனைத்து செய்திகளையும் எடுத்துரைத்தார். 



தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் மு. புனிதவதி நன்றியுரை கூறினார். இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவிகள் ராஜேஸ்வரி கமலா ஸ்ரீ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Tuesday, February 21, 2023

நேரு நினைவு கல்லூரியில் தரவு அறிவியல் பிக் டேட்டா கருத்தரங்கு.

நேரு நினைவு கல்லூரியில் தரவு அறிவியல் பிக் டேட்டா கருத்தரங்கு.

நேரு நினைவு கல்லூரி    புத்தனாம்பட்டி தரவு அறிவியல் துறை 20/2/2023 அன்று பிக் டேட்டா மற்றும் பிரிடிக்டிவ் அனலிடிக்ஸ் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. தரவு அறிவியல் துறை தலைவர் திருமதி என்.கல்பனா மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர்  டாக்டர் எம். முரளிதரன் ஆகியோர் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஆர். பொன்பெரியசாமி அவர்கள் தொடக்க உரையாற்றினார்.கல்லூரி தலைவர் இன்ஜினியர். பொன் பாலசுப்ரமணியம் அவர்கள் உரை நிகழ்த்தினார். கல்லூரி செயலாளர் திரு பொன்  ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியை பாராட்டி பேசினார். கல்லூரி பொதுக்குழு உறுப்பினர் திரு சூர்யா பாலசுப்ரமணியம் அவர்களும் இந்த அமர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.சி.ஏ ஆகியவற்றில் இருந்து சுமார் 200 மாணவர்கள் பங்கேற்று பிக் டேட்டா மற்றும் பிரிடிக்டிவ் அனலெட்டிக்ஸ் தொடர்பான தரவுகளை பெற்றனர். 


மேலும் வேலைவாய்ப்புகள் பற்றி அறிந்து கொண்டனர். வளவாளர் திரு ஆர்.குப்புசாமி அவர்கள் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் இயக்குனர் ஐ .டி தேசிய தகவல் மையம், மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு, சென்னை, நிகழ் நேர எடுத்துக்காட்டுகளை பயன்படுத்தி பிக் டேட்டா மற்றும் பிரிடிக்டிவ் அனலிடிக்ஸ் பகுப்பாய்வு பற்றி பேசினார். அவர் ஆழமான  விளக்கங்கள் வழங்கினார். வாழ்க்கையில் வெற்றி பெற மாணவர்கள் தங்கள் விருப்பங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் மாணவர்கள் புரியும் வகையில் எளிமையாக விளக்கினார் . ஒரு நல்ல வேலையை பெறுவதற்கு மாணவர்கள் என்ன கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர்கள் தங்களுக்கு என்று தனிப்பட்ட இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி உழைக்க வேண்டும் என்றார். மேலும் மாணவர்களை தினமும் யோகா செய்ய தூண்டினார். இந்த அறிவு சார்ந்த நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

Sunday, February 19, 2023

விண்ணில் பாய்ந்தது முதல் ஹைபிரிட் ராக்கெட் - 150 சிறிய ரக செயற்கைகோளுடன் ஏவப்பட்டது.

விண்ணில் பாய்ந்தது முதல் ஹைபிரிட் ராக்கெட் - 150 சிறிய ரக செயற்கைகோளுடன் ஏவப்பட்டது.


  • 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்தது.
  • செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆணந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். இதில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி ரோஸ் மார்ட்டீன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கை கோள்களின் தரவுகளை சேகரிப்ப தற்காகவும் அனுப்பப்படுகிறது. இன்று விண்ணில் செலுத்த ப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக பார்வையிட்டனர். விண்ணில் ஏவப்பட்டு உள்ள சிறிய ரக செயற்கைகோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செயற்கைகோள் விண்ணில் பாய்வதை பார்ப்பதற்காக அதனை தயாரித்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் குஜராத், பெங்களூர், ஜெய்பூர், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள், அணுசக்தி துறையினர் சுமார் 5 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அவர்கள் விண்ணில் ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்ததும் ஆரவாரத்தில் கைதட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும் போது, செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மாணவர்களால் செயற்கை கோள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைக்கான வித்து. விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மாணவர்கள் குழுவாக செயல்பட முடியும். மாணவர்களின் குழு மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இது உள்ளது.

மாணவர்கள் துறை ரீதியாக சாதிக்க பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். சிறு வயது முதலே அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி. தற்போது செயற்கை கோள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. பொறியாளர்களை பள்ளியிலேயே உருவாக்க வேண்டும். செயற்கை கோள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்றார்.






18 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

18 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback). நமது...