Saturday, February 25, 2023

பெரம்பலூர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.

பெரம்பலூர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.


தேசிய அறிவியல் நாள் (National Science Day) பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.



இந்த தேசிய அறிவியல் நாள் கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நிலா திருவிழா  பெரம்பலூர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  கொண்டாடப்பட்டது.

நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், செவ்வாய் கோள்,  ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் தேவநாதன், ஆனந்தராஜா,  மற்றும்  பாஸ்கரன்  மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர்.இந்த விழாவில் 500க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், 
இந்திய வானியல்  சங்கம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், நேரு நினைவுக் கல்லூரி, அறிவியல் பலகை, NMC ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து இந்த நிலா திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.


மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருந்தது.




No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...